Header Ads



ஜப்பான் வாழ் மடவளைச் சகோதரர்களினால் இப்தார் நிகழ்வு


ஜப்பான் வாழ் மடவளைச் சேர்ந்த சகோதரர்களினால் 15.04.2022 அன்று இப்தார் நிகழ்வுடன் நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு எமது ஊருக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்குவதற்கான ஒன்று கூடல்  ஒன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் சுமார் 100  மடவளையை சேர்ந்த சகோதரர்கள் கலந்து கொண்டதுடன்  

நாட்டின் நிலமையை கருத்தில் கொண்டு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட எமதூர் வாழ் சகோதரர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்குவதட்கான ஒரு திட்டம்  மிக விரைவாக ஏற்பாடு செய்யப்பட்டதுடன் எமது சமூகத்துக்கான எதிர்கால திட்டங்கள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது. அவற்றுள் முக்கியமாக எதிர்வரும் ஜுன் மாதம் எம்மால் ஏற்பாடு செய்யப் படவுள்ள SUMMER SOCIAL EVENT பற்றியும் கலந்தலோசிக்கப்பட்டது. 

No comments

Powered by Blogger.