Header Ads



அவசரகால நிலைமைப் பிரகடனத்தை உடனடியாக மீளப் பெறுமாறு, ஜனாதிபதியிடம் சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை


அவசரகால நிலைமைப் பிரகடனத்தை உடனடியாக மீளப் பெறுமாறு ஜனாதிபதியிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சங்ககத்தால் இன்று (02) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மக்களின் அடிப்படை உரிமைகளான பேச்சு சுதந்திரம், வெளியீட்டு சுதந்திரம் மற்றும் அமைதியாக ஒன்றுகூடும் சுதந்திரம் உட்பட கருத்து சுதந்திரம் போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களின் இறையாண்மையின் அம்சங்கள் மதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அரசோ அல்லது அதன் முகவர்களாலேயோ பாதிக்கப்படக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.