Header Ads



இடைக்கால அரசு என்பது, உள்கட்சி அரசியலைத் தவிர வேறில்லை - பிரதமரும் பதவி விலக வேண்டும்


இடைக்கால அரசு என்பது உள்கட்சி அரசியலைத் தவிர வேறில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புதிய இலங்கையானது வலுவான மாற்றங்களுடனேயே அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். வெறும் தலைமை மாற்றங்களுடன் மட்டுமல்ல எனவும் அவா் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றிரவு பிரதமர் தவிர்ந்த அனைத்து அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் கையளித்த நிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகத் தீர்மானித்துள்ள போதும், பிரதமர் இன்னமும் பதவியில் தொடர்கிறார். தலைமை அமைச்சர் பதவி விலகாததால் அமைச்சரவை முழுமையாக கலையவில்லை என்பதே பொருளாகும். இவ்வாறான நிலையிலேயே வலுவான மாற்றம் வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.