Header Ads



அடுத்த மாதம் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படுமென எச்சரிக்கை - இந்தியா பங்களாதேஸ் நாடுகளுடன் பேசுமாறும் வலியுறுத்து


நாட்டின் இன்றைய ஸ்திரமற்ற நிலைக்கு ஜனாதிபதியே பொறுப்பேற்கவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்

எனினும் நாட்டின் இன்றைய நிலைக்கு அதிகாரிகளே பொறுப்பு என்று அரசாங்கம் குற்றம் சுமத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை எதிர்வரும் மே மாதமளவில் இலங்கையில் உணவு பற்றாக்குறை ஏற்படு;ம் என்ற எச்சரிக்கையையும் அவர் விடுத்துள்ளார்

எனவே இந்தியா மற்றும் பங்களாதேஸ் உட்பட்ட நாடுகளில் இருந்து உணவுப்பொருட்களை எடு;த்துவரும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்ல மறுப்பு தெரிவித்தமை தொடர்பில் அதிகாரிகள் நாடாளுமன்றுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.