Header Ads



எனக்கு பதில் வேறொருவரை பிரதமராக நியமிக்க, ஜனாதிபதி தீர்மானித்தால் அதனை ஏற்க தயார்


பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ள தயார் என பிரதமர் மகிந்த ராஜபக்ச ஐலண்டிற்கு தெரிவித்துள்ளார்.

எனக்கு பதில் வேறொருவரை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்தால் நான் அதனை ஏற்க தயார் ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களை மதிக்கவேண்டும் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளார் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.

புதிய பிரதமரின் கீழ் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய அமைச்சரவையை அமைப்பதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளார் புதிய அமைச்சரவையை உருவாக்கவும் இணங்கியுள்ளார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.