Header Ads



கட்டுப்பாடின்றி செல்ல அனுமதிக்க முடியாது, ஆட்சி செய்ய முடியாவிட்டால் திறமையுடையவர்களிடம் ஒப்படைக்கவும் - ஞானசாரர் கொந்தளிப்பு


இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியாவிட்டால் ஆட்சி செய்யும் திறமையுடையவர்களிடம் அந்தப் பொறுப்பினை ஒப்படைக்க வேண்டுமென பொதுபலசேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் கோரியுள்ளார்.

தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாவிட்டால் தீர்வு வழங்க கூடிய ஆட்சியாளர்களிடம் அரசாங்கம் நாட்டை ஒப்படைக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.மாறாக நாடு கட்டுப்பாடின்றி செல்ல அனுமதிக்கப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் போராட்டங்களினால் நாடு மேலும் அராஜக நிலைக்கு தள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தை குற்றம் சுமத்தி ஆட்சி செய்ய முடியாது எனவும் கூட்டாக இணைந்து எடுக்கப்படும் தீர்மானங்கள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்கள் கடுமையான அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டு மக்களின் பட்டினியுடன் அரசாங்கத்தினால் விளையாட முடியாது, இந்தப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோவிட் பிரச்சினைக்கு தீர்வு வழங்கியது போன்று அரசாங்கத்தினால் ஏன் இந்தப் பிரச்சினைனகளுக்கு தீர்வு வழங்க முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்பொழுது ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லை, பிரதமர் மீது நம்பிக்கையில்லை, அமைச்சரவை மீது நம்பிக்கையில்லை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நம்பிக்கையில்லை இவ்வாறு நாடு அராஜக நிலைக்கு தள்ளப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. கிளம்பிட்டா ன் நரகப்பண்டி

    ReplyDelete
  2. கிளம்பிட்டா ன் நரகப்பண்டி

    ReplyDelete

Powered by Blogger.