Header Ads



இன்னும் 5 விக்கெட்டுக்களை இழந்தால் அரசின் ஆட்டம் முடிவுக்கு வரும் - பிரதமரை இன்று சந்திக்கும் 13 பேர்


117 என்ற சாதாரண பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ள பொதுஜன பெரமுன அரசாங்கம் இன்னும் 5 பாராளுமன்ற உறுப்பினர்களை இழந்தால் தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவுக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட முடிவு- இன்று பிரதமரை சந்திக்கின்றனர்.

இடைக்கால அரசாங்கத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் மனச்சாட்சியின்படியும் சுதந்திரமாகவும் செயற்படப்போவதாக அரசாங்கத்தின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியை சந்தித்த 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் நிலைப்பாட்டை எழுத்துமூலம் சமர்ப்பித்துள்ளனர்.

நாட்டின் தற்போதைய நிலைக்கு தீர்வை காண்பதற்காக  இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதும் தகுதிவாய்ந்த நபர் ஒருவரை பிரதமராக நியமிப்பதும் பொருத்தமான விடயங்கள்  என அவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

புதிய அமைச்சரவைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்  அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டமை உரிய முறையில் இடம்பெறவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தை காப்பாற்றுவதற்கு இடைக்கால அரசாங்கத்தை ஏற்படுத்துவதே ஒரேவழி என்ற கருத்தை கொண்டுள்ள அவர்கள்இன்று பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னர் தங்கள் முடிவை நடைமுறைப்படுத்தவுள்ளனர்.

அருண

No comments

Powered by Blogger.