Header Ads



காலி முகத்திடல் போராட்ட களத்துக்கு இலவச 4G - 5G வசதிகள்


இன்று (15) முதல் 7ஆவது நாளாக முன்னெடுக்கப்படும் காலி முகத்திடல் போராட்ட களத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இலவச   4G - 5G வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, போராட்ட களத்துக்கு அருகாமையில் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. 

எனினும், இதுவரை அதற்கான இணைப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை என செய்தியாளர் குறிப்பிட்டார்.

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நேற்று (14) காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.


No comments

Powered by Blogger.