Header Ads



சொத்துக்களை விற்றுவிட்டு வெளிநாட்டுக்கு செல்பவர்கள் அதிகரிப்பு - கடவுச்சீட்டு பெறும் இளைஞர்கள் 40 சதவீதமாக உயர்வு


நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடு செல்வதற்காக கடவுச்சீட்டு தயாரிக்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வரும் இளைஞர்களின் எண்ணிக்கை 30-40 வீதத்தால் அதிகரித்துள்ளதாக  அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

சமீப நாட்களாக நாடு முழுவதும் வீடுகள் மற்றும் வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது, பலர் வெளிநாட்டில் செல்வதற்காக தமது  சொத்துக்களை விற்னை  செய்து வருகின்றனர். 

சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு  வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும், இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.