Header Ads



மாத்தளை சாஹிரா கல்லூரி பிரதி அதிபர், பரீனா கலீல் 38 வருடகால அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்


(Kalaa bushanam J.M.Hafeez) 

மாத்தளை சாஹிரா கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி பரீனா கலீல் 38 வருடகால அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

இலங்கை அதிபர் சேவையின் முதலாம் தர அதிகாரியான இவர் 1984ம் ஆண்டு மத்தளை, குரிவல ஹமீதியா மகா வித்தியாலயத்தில் உதவி ஆசிரியராக முதல் நியமனத்தைப் பெற்றார். அதன் பின்னர் மாத்தளை, உக்குவல அஜ்மீர் தேசிய பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று 2017ம் ஆண்டு வரை அப்பாடசாலையில் 30 வருடங்கள் தொடர்ந்து சேவையாற்றியுள்ளார்.  2010ம் ஆண்டு இடம் பெற்ற அதிபர் தரம் 2 ற்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து அதே பாடசாலைக்கு பிரதி அதிபராக நியமிக்கப்பட்டார்.  அதன் பின்னர் மாத்தளை சாஹிரா கல்லூரிக்கு 2017 ம் ஆண்டு முதல் இடமாற்றம் பெற்றுச் சென்று  பிரதி அதிபராக இணைந்து கொண்டார். அங்கு தொடர்ந்து சேவையாற்றும் போது  2020ம் ஆண்டு முதல் இலங்கை அதிபர் சேவையின் முதலாம் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டார்.  ஓய்வுபெறும் வரை அங்கு பிரதி அதிபராக கடமையாற்றி வந்தார்.

ஓய்வுபெற்ற உதவிப்  பொலீஸ் பரிசோதகர் கலாபூஷணம் கவிஞர் மடவளைக் கலீலின் துணைவியான இவர்.  பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பட்டதாரியும்  பயிற்றப்பட்ட ஆசிரியரும், இலங்கைத் திறந்த பல்கலைக்கழக பட்டப்பின் படிப்பு கல்வி டிப்லோமா பட்டதாரியுமாவார்.  

No comments

Powered by Blogger.