Header Ads



35 வருடங்களாக பாங்கொலி கேட்டு வளர்ந்த தீபு பிரசாத், குடும்பத்துடன் நோன்பு பிடிக்கிறார்

 


ரமலான் மாதம் நோன்பிருப்பது அதிகாலை முதல் சூரிய அஸ்தமனம் வரை வெறுமனே பசித்திருப்பது மட்டுமல்ல கெட்ட எண்ணங்கள் மோசமான செயல்பாடுகளிலிருந்து உடலையும் உள்ளத்தையும் காப்பாற்றும் ஒருவித தியான நிலையை அனுபவப்பூர்வமாக உணர்வதாக கூறும் தீபு பிரசாத் திருவனந்தபுரம் அருகே வக்கம் சேர்ந்தவர்.

தனது 15ம் வயதில் பெற்றோருடன் ஷார்ஜா வந்தவர் கடந்த 35 வருடங்களாக பாங்கொலி கேட்டு வளர்ந்ததாக கூறும் தீபு பிரசாத் கடந்த 9 வருடங்களாக தொடர்ந்து ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து வருகிறார்...

2013 ல் ரமலான் மாதத்தில் தனது மனைவியுடன் ஒருநாள் நோன்பு வைக்க அன்றைய தினம் தலைவலியும் உடல் சோர்வும் ஏற்பட தொடர்ந்து நோன்பு வைப்பதில் தீபுவுக்குள் தயக்கம் ஏற்பட்டது..

ஆனாலும் குழந்தைகள், சிறுவர்கள் நோன்பு வைத்து மசூதிக்கு வருவதை பார்த்து நம்மாலும் முடியும் எனும் வைராக்கியத்துடன் மீண்டும் நோன்பு வைக்க துவங்கி 9வது வருடமாக தொடர்கிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக 15 வயது மகன் நிகாலும், 13 வயது மகள் லாவண்யாவும் நோன்பிருப்பதாக கூறும் தீபு பிரசாத் ரமலான் மாதமும் அது தரும் சந்தோஷமும் அளப்பரியது என்று பெருமிதம் கொள்கிறார்..

 Azheem

No comments

Powered by Blogger.