30,000 லீற்றர் எரிபொருள் பௌசருக்கு தீவைக்க முற்பட்ட குழு, பாரிய சேதங்களை தடுக்கவே பொலிசார் குறைந்தபட்ச பலத்தை பிரயோகித்தனர்
ரம்புக்கன போராட்டத்தின் போது 30,000 லீற்றர் எரிபொருளைக் கொண்டு பௌசருக்கு தீ வைக்க முற்பட்ட குழுவொன்றை தடுக்க முற்பட்டதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
அதனால் ஏற்படக்கூடிய பாரிய சேதங்களை தடுக்கவே பொலிசார் குறைந்தபட்ச பலத்தை பிரயோகிக்க வேண்டியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் ரம்புக்கன பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது ஏற்பட்ட வன்முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையிலேயே, சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்நிலையில், ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் போது பொலிஸார் அதிக பலத்தை பிரயோகித்தனரா என்பது தொடர்பில் பொலிஸ் தலைமையக மட்ட விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நியாயமாகப் போராடிய இளைஞனுக்கு வெடிவைத்து அநியாயமாகக் கொலை செய்துவிட்டு இப்போது கட்டுக்கதைகளை கக்கும் பொலிஸுக்கு எதிராக சரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட் வேண்டும்.
ReplyDeleteCrazy person. Life is worth more than a bouncer
ReplyDeleteபொய்யைப் புழுகும் இந்த பொலிஸ் கழுதையையும் சேரந்து சிறையில் அடைக்க வேணடும்.
ReplyDelete