பொலிஸார் பயன்படுத்தியதாகக் கூறும் ஆகக்குறைந்த அதிகாரத்தினால் 2 பிள்ளைகளுக்கு பாதுகாப்பாக இருந்த ஒரு தந்தை இன்று உயிருடன் இல்லை
நியாயமான விலையில் எரிபொருளை வழங்குமாறு கோரி வரிசையில் காத்திருந்த சாமிந்த உள்ளிட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எரிபொருள் கோரிய மக்களுக்கு உயிரை இழக்க வேண்டி ஏற்படும் என எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
பொலிஸார் பயன்படுத்தியதாகக் கூறும் ஆகக்குறைந்த அதிகாரத்தினால், 19 வயதான மகளுக்கும் கல்வி பயிலும் 15 வயதான மகனுக்கும் பாதுகாப்பாக இருந்த ஒரு தந்தை இன்று உயிருடன் இல்லை.
பின்னவல யானைகள் சரணாலயத்திற்கு இலைதழைகளை வெட்டிச்சென்று வழங்குவதே கொலை செய்யப்பட்ட சாமிந்த லக்ஷானின் வாழ்வாதார மார்க்கமாக இருந்தது.
குறைந்த வருமானத்தில் குடும்பத்தை வழிநடத்திய ஒரு தந்தையின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தப் பிள்ளைகளுக்கு பக்கபலமாக இருப்பது யார்?
சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், இந்த பிள்ளைகளின் தந்தையை எவராலேனும் மீண்டும் கொண்டு வர முடியுமா?
மக்களுக்காக குரல் கொடுத்த தருணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சாமிந்த லக்ஷானின் இறுதிக்கிரியைகள் ஹிரிவடுவ குடும்ப மயானத்தில் இடம்பெறவுள்ளன.
Post a Comment