Header Ads



ரம்புக்கனையில் ஊரடங்கு நீக்கம் - 27 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை


ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று(21) காலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

ரம்புக்கனை பிரதேசத்தில் போராட்டம் காரணமாக ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து அங்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இந்த போராட்டத்தினால் காயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் உட்பட 27 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், இந்த சம்பவத்தில் மொத்தம் 32 பேர் காயமடைந்துள்ளனர்.

சுமார் 15 மணித்தியாலங்களுக்கு மேலாக ரம்புக்கனை ரயில் கடவையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்தனர்.

இதனையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டிக்கு குழுவொன்று தீ வைத்துள்ளதாகவும், எரிபொருள் பவுசருக்கு தீ வைக்க முற்பட்ட போது குழுவினரை கலைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தில் ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் குருவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த டொன் சமிந்த லக்ஷான் (42) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் விசாரணை நடத்துவதற்கு சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட 20 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.