Header Ads



18 ஆம் திகதி முதல் பாடசாலை நேரம் ஓரு மணித்தியாலம் அதிகரிப்பு - சனிக்கிழமைகளில் பாடசாலைகளை நடத்து தொடர்பிலும் அவதானம்


இலங்கையிலுள்ள பாடசாலைகளில் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் புதிய நடைமுறை செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி எதிர்வரும் 18ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் புதிய தவணையிலிருந்து பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலம் வரை நீடிப்பதற்கான தீர்மானத்தை கல்வி அமைச்சு எடுத்துள்ளது.

இந்த ஆண்டுடன் (2022) தொடர்புடைய பாடத்திட்டங்களை உள்ளடக்குவதற்கு 139 நாட்கள் வரையறுக்கப்பட்ட கால அவகாசம் காணப்படுவதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலம் நீடித்து கற்பித்தலுக்கான காலம் அதிகரிக்கப்படவுள்ளது. 

இந்த புதிய திட்டத்தாலும் பாட திட்டத்தை முழுமையாக உள்ளடக்க முடியாத நிலை ஏற்படுமாயின் சனிக்கிழமைகளில் பாடசாலைகளை நடத்து தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம் செலுத்தும் சாத்தியம் காணப்படுவதாக தெரியவருகிறது. 


No comments

Powered by Blogger.