1400 ஆண்டுகள் கடந்தும், மதீனா பள்ளிவாசலில் இதுவரை மூடப்படாத ஜன்னல்
மஸ்ஜிதுன் நபவியிலே ரவ்ழா ஷெரீஃபில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸலாம் சொல்லி விட்டு பின்னால் திரும்பிப் பார்த்தால் ஒரு பெரிய ஜன்னல் திறந்திருப்பதைக் காண்பீர்கள்.
1400 ஆண்டுகளுக்கும் மேலாக
இது மூடப்படாமல் இருக்கிறது..
இந்த ஜன்னலை மூடாமல் திறந்து வைத்ததற்குப் பின்னால் ஒரு பெரிய வரலாறு உள்ளது..
வரலாற்றில் ஒரு தந்தை தனது மகளுக்கு கொடுத்த ஒரு வாக்குறுதியின் நினைவாக இது இன்றும் ஒரு நினைவுச் சின்னமாக பாதுகாக்க ப்பட்டுள்ளது.
எல்லா காலத்திலும் சிறந்ததும் மற்றும் நீண்டதொரு மகத்தான வாக்குறுதி!
அந்த ஜன்னலின் உள்ளே சுவர்களில் இருக்கும் வர்ணங்களுக்கு கூட சொல்ல ஒரு காதல் கதை உண்டு.
மஸ்ஜிதுன் நபவி
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலிருந்து பல விரிவாக்கங்களுக்கு உட்பட்டுள்ளது.
இன்றுவரை யாரும் அந்த ஜன்னலை மூடவோ அல்லது அதை உடைக்கவோ யாரும் உத்தரவிடவில்லை.
உமர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 17_ல் மஸ்ஜிதுல் ஹராமையும் அதே நேரத்தில் மஸ்ஜிதுன் நபவியையும் மீண்டும் புனரமைப்பு செய்தார்கள்..
உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக இருந்தாலும்
நமது அன்னை ஹஃப்ஸா பீவி (ரலி) அவர்களின் தந்தையுமாவார்கள்..
மக்கள் வந்து ஸலாம் சொல்லக் கூடிய பகுதியின் தெற்குப் பகுதியில் தான் ஹஃப்ஸா அம்மையாரின் அறை உள்ளது.
ஹஃப்ஸா அம்மையார் தனது அன்பு கணவரான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னோடு சேர்ந்து உறங்கி இருந்த அறையை விட்டு வெளியேறும் மனநிலையில் இல்லை.
உமர் (ரலி) அவர்கள் இரண்டு நாட்களாக அந்த அறையிலிருந்து வெளியேறும் படி ஹஃப்ஸா அம்மையார் மீது அழுத்தம் செலுத்தினார்கள்..
ஆனால் அவரது மகள் அங்கிருந்து நகருவதற்கு தயாராகவில்லை..
அந்த அறையை யாருக்கும் விட்டு கொடுக்க அவர்கள் தயாராக இல்லை.
ஆயிஷா(ரலி) உட்பட பலர் முயற்சி செய்து தோற்றுப் போனார்கள்.
சில நாட்களுக்குப் பிறகு, உமர் (ரலி) அவர்கள் தம் மகன் உபைதுல்லாஹ்வையும் கூட்டி ஹஃப்ஸா அம்மையாரை காணச் சென்றார்கள்.
விஷயத்தின் தீவிரத்தை உபைதுல்லா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது சகோதரி ஹஃப்ஸா அம்மையாரிடம் மிகவும் பாசத்தோடும் பரிவோடும் எடுத்துச் சொன்னார்கள்..
"நீங்கள் இந்த சிறிய அறையை விட்டு வெளியேறி, அருகிலுள்ள பள்ளிவாசலுக்கு வெளியே உள்ள எனது பெரிய அறைக்கு செல்லுங்கள்.
நான் உடனடியாக மதீனாவின் புறநகர்ப் பகுதிக்கு மாறி சென்று விடுகிறேன்..
அந்த அறை உங்களுக்கு சொந்தம்...
அண்ணனின் பாசமான வார்த்தையில் ஹஃப்ஸா அம்மையார் விழுந்து விட்டார்கள்..
தந்தையிடமும், சகோதரரிடமும் நாயகத்தின் மீதான தன் காதலைப் பற்றி ஹஃப்ஸா அம்மையார் மனம் திறந்தார்கள்:
"என் ஹபீபை நான் எப்போதும் பார்க்கும் விதம் சகோதரர் உபைதுல்லாஹ்வின் வீட்டு ஜன்னலை எப்போதும் திறந்து வைக்க எனக்கு அனுமதி தர வேண்டும்...
ஹஃப்ஸா அம்மையார் வைத்த நிபந்தனையை தந்தையும், சகோதரரும் ஏற்றுக் கொண்டனர்..
மறுப்பு ஏதும் சொல்லவில்லை..
ஆம்.
உனது சகோதரர் உபைதுல்லாவின் அறை ஜன்னல் மூடாது.
அது எப்போதும் உனக்கு வேண்டி திறந்து இருக்கும்..
ஒரு தந்தையின் அசைக்க முடியாத வாக்குறுதி..
வரலாற்றில் மிகப்பெரிய வாக்குறுதி...!!
நபிகளாரின் அன்பின் உருவகமாக இன்னும் அந்த ஜன்னல் திறந்து கிடக்கிறது..
ஹிஜ்ரி 41 _ல் ஹஃப்ஸா அம்மையார் வஃபாத்தானாலும் நூற்றாண்டுகள் பல கடந்தும் இன்றும் அந்த ஜன்னல் திறந்தே இருக்கிறது.
இமாம் சுயூத்தி மற்றும் இப்னு கஸீர் இருவரும் கூகத்து உமர் என்று அழைக்கப்படும் அந்த ஜன்னலைப் பற்றி வரலாற்று புத்தகங்களில் பதிவு செய்துள்ளனர் .
تاريخ الخلفاء للسيوطي، وسير أعلام النبلاء للذهبي،
வல்லோன் அல்லாஹ் ஹஃப்ஸா அம்மையாருடன் நம் அனைவரையும் சுவனத்தில் நுழைய செய்வானாக..
😪❤️🌹
*தமிழில்:
M.சிராஜுத்தீன்அஹ்ஸனி.
Al hamdulilla
ReplyDelete