11 கட்சிகளை கும்பல் என்கிறார் மனோ, சந்தையில் ஆள் தேடி திரிகிறார்கள் எனவும் விமர்சனம் - தனக்கும் அழைப்பு விடுத்ததாகவும் தெரிவிப்பு
- Mano Ganesan -
கழுத்துக்கு சுருக்கு வரும் போது "அண்ணன் என்னடா? தம்பி என்னடா?"
தம்பி தன்னை விலக்க மாட்டார் என அண்ணன் சொன்னார்.
ஆகவேதான், தம்பியை கோபப்படுத்தாமல் இருக்க, "20ஐ அனுப்பி 19ஐ கொண்டு வருவதில் தனக்கு அக்கறை இல்லை" என என்னிடம் அண்ணன் சொன்னார்.
இப்போ தம்பி, 11கட்சி கும்பலை பிடித்து, 113ஐ கொண்டு வாருங்கள். நீங்கள் சொல்பவரை பிரதமராக்குகிறேன், என்று கூறி விட்டார்.
ஆகவே அண்ணனுக்கு தம்பி, கதவை காட்டி விட்டார்.
இப்போ இந்த 11 கட்சி கும்பல் சந்தையில் ஆள் தேடி திரிகிறார்கள்.
என்னிடமும் வந்தார்கள். 226வது ஆளாக வேண்டுமானால் வருகிறேன், என்றேன்...! (புரிந்தால் சரி..🤣)
"பிழை செய்தது நீ தானே, என்னை ஏன் கழற்றி விட்டாய்" என அண்ணன் குமுறுகிறார்.
11கட்சி ஆட்சியை அமைத்ததும், 20ஐ அகற்றி 19ஐ கொண்டு வாராங்களாம். அதாவது தம்பியின் அதிகாரங்கள் கழற்றப்படுமாம்.
அப்புறம் அமைச்சரவைக்கு மேலே "தேசிய நிர்வாக சபை" அமைக்கிறார்களாம். அதில் நீங்களும் வர வேண்டும் என எம்மிடம் சொல்கிறார்கள்.
அண்ணனை அனுப்பி விட்டு, 20ஐயும் அனுப்பி விட்டு வாருங்கள். ஆகட்டும், பார்க்கலாம்.! என காமராஜர் பாணியில் பதில் கூறி இருக்கிறோம்.
Post a Comment