Header Ads



11, 12 ஆம் திகதிகளில் பொதுவிடுமுறை பிரகடனம் - புத்தாண்டுக்கு 9 நாள் விடுமுறை


இம்முறை புத்தாண்டுக்கு ஒருவாரத்துக்கு மேல் பலருக்கும் விடுமுறை கிடைக்கின்றது. சொந்த விடுமுறை உட்பட 9 நாட்கள் விடுமுறை எடுக்க முடியும்.

அந்த வகையில்,  புத்தாண்டுக்கு முதல்வாரத்தில் 9,10  ஆம் திகதிகளில் சனி, ஞாயிறு விடுமுறையில் இருப்பவர்கள், 11,12 ஆம் திகதிகளில் கடமைக்குத் திரும்பியிருக்க வேண்டும். இல்லையேல் ​சொந்த விடுமுறைகளில் எடுக்கவேண்டும்.

அதன்பின்னர், 13,14 திகதிகளில் புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது. அதற்குப்பின்னர் 16, 17 ஆம் திகதிகளில் விடுமுறை. இடையில், 15 ஆம் திகதியும் சொந்த விடுமுறை எடுக்கலாம்.

இந்நிலையில், எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் பொதுவிடுமுறை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.