Header Ads



100 அடி மரத்தில் ஏறி போராட்டம் - ஜனாதிபதி வீடு செல்ல வேண்டுமென முழக்கம்


அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஹட்டன் - டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் 100அடி மரத்தில் ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். 

”ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும்”, “தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும்”, “காலி முகத்திடலில் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும்”, “கேகாலை ரம்புக்கனை பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபருக்கு நீதி வேண்டும்” எனக் கோரியுமே இந்த நபர் இவ்வாறு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா இன்ஜஸ்ட்ரி கீழ் பிரிவு தோட்டத்தில் 45வயதுடைய பழனியாண்டி முருகேஸ் என்ற நபரே இவ்வாறு நூறு அடி உயரம் கொண்ட மரத்தின் மீது எறி போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். 

இலங்கை தேசியக் கொடியைப் பிடித்தவாறு, எதிர்ப்பு பதாதைகளை குறித்த மரத்தில் காட்சிப்படுத்தியவாறு இவர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். 

No comments

Powered by Blogger.