Header Ads



SLMMF 2022/2023 ஆம் ஆண்டுக்கான செயற்குழு கூட்டமும், செயற்குழு உறுப்பினர்களின் விபரமும்


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2022-2023 ஆம் ஆண்டுக்கான புதிய செயற்குழுவின் முதல் கூட்டம் கொழும்பில் இன்று (20.03.2022) ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.

இந்நிகழ்வு போரத்தின் தலைவி புர்கான் பீ இப்திகாரின் தலைமையில் இடம் பெற்றது. கடந்த 12 ஆம் திகதி கொழும்பில் இடம் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பேராளர் மாநாட்டின் போது புதிய தலைவியாக சிரேஷ்ட ஒலிபரப்பாளர் புர்கான் பீ இப்திகார், பொதுச் செயலாளராக சர்வதேச விருது வென்ற ஊடகவியலாளர் எம்.ஜே. பிஸ்ரின் முஹம்மத், பொருளாளராக ரொயிட்டர்ஸ் செய்தியாளர் சிஹார் அனீஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக சாதிக் ஷிஹான் ,ஜெம்சித் அசீஸ், எம்.ஏ.எம் நிலாம், கலைவாதி கலீல் , ஜாவித் முனவ்வர் எஸ்.எம்.எம். முஸ்தபா, நுஸ்கி முக்தார், எம்.எப். ரிபாஸ், ஷாமிலா செரீப், சமீஹா சபீர்;, எம்.எஸ்.எம் ஸாகிர், டீ.ஜீ.எம்.எஸ்.எம் ராபி, எம்.எம். ஜெஸ்மின், ஜே.எம். நாளிர், சீ.எம். சுபைர் ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

இன்றைய தினம் (20.03.2022) இடம் பெற்ற முதல் செயற்குழு கூட்டத்தின் போது தலைவிக்கு உள்ள அதிகாரத்தில் தாஹா முஸம்மில், ஷம்ஸ் பாஹிம் ஆகியோரை செயற்குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

இந்த கூட்டத்தின் போது இவ்வருடத்துக்கான பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் ஏனைய பதவிகளுக்குமான தெரிவுகளும் இடம் பெற்றன.

பேராளர் மாநாட்டில் அதிகளவான உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க முன்னாள் தலைவர் என்.எம் அமீன் செயற்குழுவில் இணைக்கப்பட்டார்.

உப தலைவர்களாக எம்.ஏ.எம் நிலாம், கலைவாதி கலீல் ஆகியோரும், தேசிய அமைப்பாளராக மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா, உப செயலாளர்களாக சாதிக் ஷிஹான், ஜாவித் முனவ்வர், உதவி பொருளாளராக ஜே.எம்.நாளிர், சஞ்சிகை ஆசிரியர்களாக  சாமிளா சரீப் ,ஷம்ஸ் பாஹிம், பயிற்சிப்பிரிவு பிரதானியாக சமீஹா சபீர்;, இணையத்தள ஆசிரியராக டீ.ஜீ.எம்.எஸ்.எம் ராபி ,ஊடக இணைப்பாளராக எம்.எஸ்.எம்.ஸாகிர் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தின் முதல் இரண்டு வேலைத்திட்டங்களாக பொலன்நறுவை மாவட்டத்தைச் சேர்ந்த சுகவீனமுற்றுள்ள மூத்த ஊடகவியலாளர்  ரஷீத்துக்கு பண உதவி வழங்குதல், 25 மாவட்டங்களையும் சேர்ந்த புதிய ஐம்பது ஊடகவியலாளர்களுக்கான ஆறு மாதகால தொடர் பயிற்சி வழங்குதல் என்ற முடிவுகள் எடுக்கப்பட்டன.

தகவல் 

எம்.ஜே.பிஸ்ரின் முஹம்மத் பொதுச் செயலாளர் 

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோரம் 

No comments

Powered by Blogger.