அரசை வீட்டிற்கு அனுப்பும் போராட்டதை SJB, 15 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பிக்கிறது
எனக்கு தெரிந்த வரையில் 2001 ஆம் ஆண்டு வரை 12 மணித்தியாலங்கள் நாட்டில் மின்சாரம் இல்லாமல் இருந்தது,ஐ.தே.க அரசாங்கம் வந்து கரு ஜயசூரிய மின்சக்தி அமைச்சராக பதவியேற்று 159 நாட்களில் இந்த மின்சார நெருக்கடியைத் தீர்த்து வைத்தார். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களில் ஏழரை மணி நேரம் மின்சாரம் இல்லாமல் போகிறது. இதற்கு அரசிடம் பதில் இல்லை.எண்ணெய் கொள்வனவு செய்ய டொலர் இல்லை.
சர்வதேச சமூகமும் பிற நிறுவனங்களும் நெருக்கடி மோசமடைந்து வருவதாகக் கூறுகின்றன.அரசாங்கமும் அதிர்ந்து போய், ஒரு பக்கம் ஒரு குழு வெளிவர முயற்சி செய்து பல அமைச்சர்களை நீக்கியது.அடுத்த மாதம், மற்றொரு குழு வெளியேறும் என கேள்வி படுகிறோம். எனவே, இந்த நாட்டைக் காப்பாற்றுவதற்கான ஒரே தொலைநோக்குப் பார்வை கொண்ட கட்சி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே. இந்தப் பயணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் ஒன்றிணையுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இதன் தொடர்ச்சியான போராடத்தின் ஆரம்பத்தை மார்ச் 15 பிற்பகல் 2 மணிக்கு கொழும்பில் தொடங்குவோம். இந்நாட்டை காப்பாற்றும் பயணத்தில் இறங்க இந்த நாட்டில் உள்ள அனைவரையும் அணி திரளுமாறு அழைக்கிறோம். திருடர்கள் அலையை வீட்டுக்கு அனுப்ப தேவையான நடைபயணத்தை மார்ச் மாதத்தில் நாங்கள் தொடங்குகிறோம். நாட்டை நேசிக்கும், நாட்டைக் காப்பாற்றும் அணியில் இனைந்து கொள்ளுமாறு சகலருக்கும் அழைப்பு விடுக்கிறோம் என தெரிவித்தார்.
Post a Comment