கொவிட் ஜனாசாக்களை அந்தந்த பிரதேசத்தில் அடக்கலாமென்ற முடிவை, அரசாங்கம் ஏன் திடீரென அறிவித்தது..? - இம்ரான் ஆp
- ஐ.எல்.எம் நாஸிம் -
இன்று இந்த அரசாங்கம் ஜெனீவா கூட்டத் தொடர் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் கொவிட் மூலம் மரணிக்கும் ஜனாசாக்களை/உடல்களை அந்தந்த பிரதேசத்தில் அடக்கலாம் என்ற முடிவை திடீர் என்று அறிவித்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பா உ இம்ரான் மகரூப் வெள்ளிக்கிழமை (4) இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
கொவிட்டால் இறந்த உடல்களை அந்தந்த பிரதேசத்தில் அடக்க அனுமதி தருமாறு ஆரம்பத்தில் கேட்டிருத்தோம். WHO மூலமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் உடல்களை அடக்க முடியும் என்று நாங்கள் சொன்ன சந்தர்ப்பத்தில் உடல்கள் மீது அரசியல் சாயம் பூசி வாக்குத்தேடியவர்களே இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.
இந்த முடிவு ஏதோ ஒரு மாயையை ஏற்படுத்துவது போன்று மக்களால் பார்க்கப்படுகிறது. இத்த அரசாங்கம் மீண்டும் எதை செய்வதற்கு தயாராகிறது என்ற கேள்வியும் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
Diesel saving that only reason!
ReplyDeleteஇனி ஆட்சி நடாத்த முஸ்லிம் பா.உ. க்களை உள்வாங்கப்போகிறார்கள் போலும். இதுதான் அரசியல் காய்நகர்த்தல். மின்சார, பெற்றோலிய வினியோகத்தில் செயற்கைத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அரசின் மீதும் தொடர்பான அமைச்சர் மீதும் மக்களை வெறுப்பேற்றி அச்சந்தர்ப்பத்தில் பதவி விலக்கல் செய்தமை போல.
ReplyDelete