Header Ads



NCC - UK தேசிய சிறுவர் போட்டி - லூட்டன் நகரில் 27 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சுற்றும், பரிசளிப்பும்..!!


ஐக்கிய இராச்சியத்திலே தொடர்ச்சியாக  நடாத்தப்பட்டு வருகின்ற சிறார்களுக்கும், மாணவர்களுக்கும் மிகவும் பரீட்சயமான    NCC - National Children Competition என்றழைக்கப்படும்  போட்டி நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிகள் எதிர்வரும்  27-03-22 ஞாயிறன்று  லூட்டன் நகரிலுள்ள University of Bedfordshire கட்டிட வளாகத்தில் நடைபெறவுள்ளது. கடந்த மாதம் பிராந்திய மட்டத்திலான போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றோருக்கான இறுதித் தெரிவே இங்கு இடம்பெற உள்ளது.

2008ம் ஆண்டு SLIF-UK தற்போது BMS என்றழைக்கப்படும் இலங்கை முஸ்லிம்களால் நிர்வகிக்கப் படுகின்ற அமைப்பினரால்  Building Confidence in Growing Children சிறுவர்களுக்கு தைரியம், தன்நம்பிக்கை, துணிவு, ஆளுமை ஆகியவற்றை வளர்த்தல் என்ற உயரிய  இலக்குடன்   இலங்கை வம்சாவளி பிள்ளைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இப் போட்டிகள்  தற்போது வருடாவருடம் எண்ணிக்கை அதிகரித்து தேசிய மட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்கும் நிகழ்வாக உறுவெடுத்துள்ளது.

இம்முறை 12வது வருட தொடர் போட்டிகள் இடம் பெற்று வருகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட்-19 பரவல் காரணமாக எல்லா நிகழ்வுகளும் பிற்போடப்பட்டிருந்த காரணத்தால் NCC சென்ற வருடம்  இடைநிறுத்தப்பட்டு மீண்டும் இவ்வருடம் தொடரப்பட்டுள்ளது.

இவ்வருடம் தேசிய ரீதியில் 15 பிராந்தியங்களில் ஆரம்ப போட்டிகள் இரண்டு கட்டமாக அதாவது Written Competition - எழுத்துப் போட்டிகள் மற்றும் Stage Competition - மேடைப் போட்டிகள் நடாத்தப்பட்டன. இவை சூப்பர் ஹீரோஸ், பிரிவு 1,2, 3 என நான்கு பிரிவுகளாகவும் மற்றும் பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்டோருக்கு NYC என்ற பெயரில் பிரிவு 4, 5, 6 என மூன்று பிரிவுகளாகவும் நடாத்தப்பட்டது. இந்த NYC - National Youth Competition என்ற பதம் இரண்டாவது முறையாக தொடர்ந்துள்ளது. இந்த பிரிவில் இடம்பெறும் TV Reporting, Public Speaking , Story Telling Magazine Writing மற்றும் YMT ஆகிய போட்டிகள் மிகவும் சுவாரஸ்யம் ஆனதும், பிரசித்திமிக்கதும் ஆகும். இவை தவிர பெரியோர்களுக்கான அரபு எழுத்தணி போட்டியும் தொடராக இடம்பெறுவது வயது வந்தவர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இப்போட்டியின் சிறப்பு என்னவெனில் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து போட்டியாளர்களுக்கும் அந்த நாளின் இறுதியிலேயே சான்றிதழ்கள் வழங்கப்பட்டுவிடும். அவர்கள் தொடர்ந்தும் இறுதிப் போட்டியிலும் தெரிவாகி வெற்றிபெற்றால் அவர்களுக்கான பதக்கங்களும், பரிசில்களும், வெற்றிக்கோப்பைகளும் பிரிதொரு நாளில் தனியாக பரிசளிப்பு வைபவம் நடாத்தப்பட்டு அதன்போது கையளிக்கப்படும். இது அவர்களுக்கான தனியான அங்கீகாரமும் , ஊக்கமளித்தலுமாகும்.

அனைத்து போட்டி நிகழ்ச்சிகளும் தன்னார்வ தொண்டர்களால் முன்னெடுக்கப் பட்டு வருவது மேலும் குறிப்பிடத் தக்கது.

NCC / NYC குழுவினர்

No comments

Powered by Blogger.