Header Ads



கருத்து தெரிவிப்பதால் தொழிலை, இழக்கின்ற நிலைமை உருவாகியுள்ளது - இம்தியாஸ் Mp


கருத்துச் சுதந்திரம்,மொழிச் சுதந்திரம் அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமையாகும்.  ஆனால் இன்று அந்த உரிமை சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.  நேர்மறையான கருத்துகள் மற்றும்  விமர்சனங்களை எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கருதி அக்கருத்துகளை  தெரிவிப்பவர்களை  பல்வேறு வழிமுறைகளில் துன்புறுத்துவதை  நாம் இன்று கண்கூடாக காண்கிறோம்.

குறிப்பாக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தவர்கள் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு  அழைக்கப்படுதல், கைது செய்யப்படுதல்   மற்றும் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதிணூடாக தெளிவாகிறது.

இன்று கருத்து தெரிவிப்பதால் தனது தொழிலை இழக்கின்ற நிலைமை உருவாகியுள்ளது. 

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் பணிபுரிந்த திருமதி பாரமி ரணசிங்க முகநூலில்  பதிவிறக்கம் செய்த ஓர் பதிவிற்காக பதவி நீக்கப்பட்டது இதை உறுதிப்படுத்துகிறது. 

கருத்து தெரிவித்ததற்காக எடுக்கப்பட்ட இந்த தீர்வை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். 

திருமதி பாரமி ரணசிங்கவை  உடனடியாக  பணியில் மீள் அமர்த்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.


இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

பாராளுமன்ற உறுப்பினர்

ஐக்கிய மக்கள் சக்தி

No comments

Powered by Blogger.