Header Ads



தலிபான்களிடம் நாட்டை ஒப்படைப்பது நல்லது, நன்றாக ஆட்சி செய்வார்கள் - நளின் Mp


இலங்கையை தலிபான்களிடம் ஒப்படைத்தாலும் சிறப்பாக ஆட்சி செய்வார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

மிக மோசமான திருடர்களுடன் உலக நிதி நிறுவனங்கள் கொடுக்கல் வாங்கல் செய்யாது. எனவே மக்களிடம் நாம் கூறுகின்றோம் தற்பொழுது பொறுமை காத்தது போதும்.

இந்த அரசாங்கத்தின் சாபத்தை முடிவுக்குக் கொண்டு வர நாம் வீதிக்கு இறங்க வேண்டும். நாட்டுக்கு இந்த நிலைமை ஏற்றபட்டதற்கு கோவிட் காரணமல்ல.

இவர்கள் எதற்கு எடுத்தாலும் கோவிட் கோவிட் என்று மந்திரம் ஓதுகின்றனர். தெற்கு ஆசியாவில் வறுமையான நாடுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கும் இவ்வாறான நெருக்கடி நிலைமை கிடையாது.

தலிபான்கள் கைபற்றிய ஆப்கானிஸ்தானில் கூட இவ்வாறான ஓர் நிலைமை கிடையாது. இதைவிட தலிபான்களிடம் நாட்டை ஒப்படைப்பது நல்லது, இவர்களை விடவும் தலிபான்கள் நாட்டை நன்றாக ஆட்சி செய்வார்கள்.

கோட்டாபய ராஜபக்ச அவர்களே தயவு செய்து கும்பிட்டு கேட்கின்றோம் அமெரிக்காவிற்கே சென்று விடுங்கள்.

ஆட்சி செய்யக்கூடியவர்களிடம் நாட்டை ஒப்படையுங்கள் என நளின் பண்டார கூறியுள்ளார்.

1 comment:

Powered by Blogger.