Header Ads



JVP யின் வங்கிக் கணக்கில் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் - மிகப்பெரிய நிதியை கொண்ட கட்சியாக மாறியுள்ளதாக ஆளும் தரப்பு குற்றச்சாட்டு


சமவுடைமை பொருளாதாரம் பற்றி பேசும் மக்கள் விடுதலை முன்னணியின் வங்கிக் கணக்கில் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் இருப்பதாகவும் அந்த கட்சி தெற்காசியாவில் மிகப் பெரிய நிதியை கொண்ட கட்சியாக மாறியுள்ளது எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் வங்கிக் கணக்கில் இரண்டு பில்லியன் ரூபாய் நிதி இருப்பதாகவும் மக்களுக்காக அந்த கட்சி பணம் எதனையும் செலவிடவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அனுரகுமார திஸாநாயக்கவும் சர்வக் கட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ளவில்லை. சமவுடமை பற்றி மக்கள் விடுதலை முன்னணியினர் பேசுகின்றனர். அந்த கட்சி தெற்காசியாவிலேயே அதிகமான நிதி இருக்கும் கட்சி. மக்கள் கஷ்டப்படும் இந்த சந்தர்ப்பத்தில் அந்தி நிதியில் இருந்து ஒரு ரூபாயை செலவிட்டுள்ளதா?.

நான் அறிந்த வரை கட்சியின் நிதியாக சுமார் இரண்டு பில்லியன் ரூபாய் இருக்கின்றது. இந்த நேரத்தில் அந்த பணத்திலாவது மக்களுக்கு உதவி செய்ய வேண்டாமா?. எமக்கு அணியவும் உண்ணவும் கொடுப்பது மக்கள் எனவும் வாகனங்களுக்கு எரிபொருளை கொடுப்பது மக்கள் என அந்த கட்சியினர் கூறுகின்றனர்.

மக்கள் விடுதலை முன்னணி ஆட்சிக்கு வந்த பின்னர் தமக்கு ஆடையை வாங்கி கொடுத்த வர்த்தகர்களுக்கு அடிப்பணிய நேரிடாதா?. தமது வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொடுக்கும் நபர்களுக்கு அடிப்பணிய நேரிடாதா?.

இவை தெளிவாக நகைப்புரிக்குரிய கதைகள். இவர்கள் எப்படி வாழ்க்கை நடத்துகின்றனர் என்ற சந்தேகம் எமக்குள்ளது. இவர்கள் அரசியலில் ஈடுபடுவது சம்பந்தமாகவும் எமக்கு விமர்சனங்கள் உள்ளன.

சஜித் பிரேமதாவுக்கும் அனுரகுமாரவுக்கும் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு யோசனைகள் இருக்குமாயின் அவர்கள் சர்வக் கட்சி மாநாட்டிற்கு சென்று ஜனாதிபதிக்கு முன்னால், அவற்றை முன்வைத்திருக்கலாம். ஜனாதிபதியிடம் முன்வைக்காமல், ஏன் மக்கள் மத்தியில் சிரிப்பூட்டும் கதைகளை கூறுகின்றனர்?.

இவர்களுக்கு வேறு நிகழ்ச்சி நிரல் உள்ளது. நாட்டின் வளங்களை விற்பனை செய்வதாக கூறுகின்றனர். பல்வேறு விடயங்களை கூறுகின்றனர். நெருக்கடி இருப்பதாக கூறுகின்றனர்.

நெருக்கடியை தீர்க்கவே ஜனாதிபதி, நிதியமைச்சர், பிரதமர் ஆகியோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் எனவும் சமன்பிரிய ஹேரத் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. சமன்பிரிய ஹேரத் என்பவர் ஒரு மனநோயாளர் போல் தெரிகிறது. மனநோயாளர்களின் கருத்துக்களை இங்கு பிரசுரிப்பதன் நோக்கம் யாது?

    ReplyDelete

Powered by Blogger.