Header Ads



Dr ஷாபியை வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்க குரு­ணாகல் நீதிவான் மறுப்பு - நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்காக நீதிமன்றம் காத்திருப்பு


(எம்.எப்.எம்.பஸீர்)

குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் தாய்­மா­ருக்கு சட்ட விரோ­த­மாக கருத்­தடை செய்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்டு கைது செய்­யப்­பட்டு பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் முன்னாள் பிர­சவ மற்றும் மகப்­பேற்று வைத்­தியர் ஷாபி சிஹாப்­தீனை, அவ்­வ­ழக்­கி­லி­ருந்து முற்­றாக விடு­விக்க குரு­ணாகல் நீதிவான் நீதி­மன்றம் நேற்று (9) மறுத்­தது.

குறித்த விவ­கா­ரத்தை விசா­ரணை செய்த குரு­ணாகல் முன்னாள் நீதிவான், இவ்­வி­வ­கா­ரத்தில் அமைத்த நிபு­ணர்கள் குழுவின் அறிக்கை இது­வரை மன்றில் சமர்ப்­பிக்­கப்­ப­டாத நிலை­யி­லேயே, அதனை மையப்­ப­டுத்தி இந்த விடு­விப்பு தொடர்­பி­லான கோரிக்­கையை நீதி­மன்றம் நிரா­க­ரித்­துள்­ளது. இதற்­கான உத்­த­ரவை குரு­ணாகல் நீதிவான் பந்­துல குண­வர்­தன நேற்று பிறப்­பித்­துள்ளார்.

நேற்­றைய தினம் வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன் தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணைகள் குரு­ணாகல் நீதிவான் நீதி­மன்றில் மீள விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது வைத்­தியர் ஷாபி சிஹாப்­தீ­னுக்­காக ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மைத்­திரி குண­ரத்ன தலை­மை­யி­லான சட்­டத்­த­ர­ணிகள் குழாம் மன்றில் ஆஜ­ரா­னது.

இதன்­போது குற்­ற­வியல் நடை­முறை சட்டக் கோவையின் 120 ( 3) ஆம் அத்­தி­யாயம் பிர­காரம் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மைத்­திரி குண­ரத்ன விஷேட கோரிக்கை ஒன்­றினை முன் வைத்தார்.

இந்த விவ­கா­ரத்தில், வழக்­கொன்­றினை அல்­லது குற்றப் பத்­தி­ரி­கை­யினை தாக்கல் செய்யும் அள­வுக்கு சந்­தேக நப­ரான தனது சேவை பெறு­ந­ருக்கு எதி­ராக எந்த சாட்­சி­யமும் இல்லை எனில் அவரை குற்­ற­வியல் நடை­முறை சட்டக் கோவையின் 120 (3) ஆம் அத்­தி­யா­யத்­துக்கு அமைய விடு­தலை செய்­யு­மாறு அவர் கோரினார்.

இந் நிலையில் அந்த கோரிக்கை தொடர்பில் நேற்­றைய தினம் தனது உத்­த­ரவை நீதிவான் வழங்­கினார்.

அதன் பிர­காரம் அக்­கோ­ரிக்­கையை நிரா­க­ரிப்­ப­தாக அறி­வித்த நீதிவான் பந்­துல குண­வர்­தன, அவ்­வுத்­த­ரவில் மேலும் சில விட­யங்­க­லையும் வெளிப்­ப­டுத்­தினார்.

சந்­தேக நப­ரான வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ரிக்­கப்­பட்ட போதும், பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைகள் தொடர்பில் அவ­ருக்கு எதி­ராக எந்த சான்­று­களும் இல்லை என நீதிவான் குறிப்­பிட்டார்.

அத்­துடன் அவ­ருக்கு எதி­ராக கறுப்பு பண சுத்­தி­க­ரிப்பு சட்­டத்தின் கீழ் விட­யங்கள் முன் வைக்­கப்­பட்ட போதும் அதற்­கான சான்­று­களும் இது­வரை மன்றின் முன்­னி­லையில் இல்லை என அவர் குறிப்­பிட்டார்.

எனினும் இதற்கு முன்னர் இந்த வழக்கை விசா­ரித்த நீதிவான், இந்த விவ­காரம் தொடர்பில் அறிக்கை பெற நிபு­ணர்கள் குழு­வொன்­றினை நிய­மித்­துள்ள நிலையில், அந்த நிபு­ணர்கள் குழாமின் அறிக்கை இது­வரை மன்­றுக்கு கிடைக்­காத நிலையில், அவ்­வ­றிக்­கையில் கூறப்­படும் விட­யங்­களை கருத்தில் கொள்­ளாது சந்­தேக நபரின் கோரிக்­கைக்கு அனு­ம­தி­ய­ளிக்க முடி­யாது எனக் கூறி அதனை மறுத்தார்.

இந் நிலையில், மற்­றொரு கோரிக்­கையை முன் வைத்த ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மைத்­திரி குண­ரத்ன, சந்­தேக நப­ரான வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன் இரு வாரங்கள் வெளி­நாடு செல்ல வேண்­டிய தேவை இருப்­பதால் அவ­ரது கடவுச் சீட்டை தற்­கா­லி­க­மாக விடு­விக்­கு­மாறு கோரினார்.

அதற்கு சி.ஐ.டி. தரப்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இந் நிலையில், இரு தரப்பினருக்கும் அது குறித்து ஒரு வாரத்துக்குள் எழுத்து மூல சமர்ப்பணங்களை முன் வைக்க உத்தரவிட்ட நீதிவான், அது தொடர்பிலான உத்தரவை இரு வாரத்தில் அறிவிப்பதாக கூறி வழக்கை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.-Vidivelli

No comments

Powered by Blogger.