Header Ads



அரசாங்கத்துடன் தொடர்ந்து இருப்பதா..? இல்லையா..?? அவசரமாக கூடுகிறது CWC


இந்த அரசாங்கத்தில் தொடர்ந்து அங்கம் வகிப்பதா? அல்லது இல்லையா? என்பது தொடர்பிலான தீர்மானத்தை எட்டுவதற்காக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அவசரமாகக் கூடவுள்ளதென தகவல்கள் கசிந்துள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் 23 ஆம் திகதியன்று நடைபெற்ற சர்வக்கட்சி மாநாட்டை காங்கிரஸ் புறக்கணித்திருந்தது. தாங்கள் முன்வைத்திருந்த கோரிக்கைக்கு செவிசாய்த்து, நடைமுறைப்படுத்தாமையை கண்டித்தே, புறக்கணிக்க முடிவுச் செய்ததாக காங்கிரஸ் வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், தன்னுடைய கட்சிக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியொன்றை வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், அரசாங்கத்தின் பிரதானிகளிடம் கோரியிருந்துள்ளார்.

தான், பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்தில் இருவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகள் வழக்கப்பட்டுள்ளன நிலையில், அரசாங்கத்தின் வெற்றிக்காக பெரும் பங்காற்றிய தங்களுடைய கட்சிக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி வழங்கவில்லையென ஜீவன் தொண்டமான், அந்த பிரதானிகளின் காதுகளுக்குப் போட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில், அரசாங்கத்துடன் தொடர்ந்து இருப்பதா? அல்லது இல்லையா? என்பது தொடர்பில் ஆராய்வதற்கே, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அவசரமாகக் கூடவுள்ளதாக அறியமுடிகின்றது.

No comments

Powered by Blogger.