Header Ads



ஹிருனிக்காவின் வீட்டின் மீது மலக்கழிவு வீச்சு - விசாரணை வேண்டும் என பாராளுமன்றத்தில் தெரிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்துள்ளமையானது, முன்னாள் அமைச்சர்கள் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை புறக்கணிக்கும் செயற்பாடாகும் என்று எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி இந்த கருத்தை நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.


அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் இணைந்திருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஜனாதிபதியை சந்தித்து விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்

சர்வகட்சி மாநாடு மற்றும் பொருளாதார நிபுணர்கள் குழு அமைப்பு என்பவற்றுக்கு ஜனாதிபதி இணங்கியுள்ளார் எனில் தமது தோல்வியை ஏற்றுக்கொண்ட நிலையிலேயே ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாகவும் ஹெக்டர் அப்புஹாமி குறிப்பிட்டார்.

இதேவேளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திரவின் வீட்டின் மீது மலக்கழிவுகளை எறிந்தவர்களில் ஒருவருக்கும், ஊடகவியலாளர் சமுத்தித்தவின் வீட்டின் மீது மலக்கழிவை எறிந்தவர்களில் ஒருவரின் உருவத்துக்கும் இடையில் ஒற்றுமை இருப்பதாக ஹெக்டர் அப்புஹாமி குறிப்பிட்டார்.

எனவே இது தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

No comments

Powered by Blogger.