கொத்து ரொட்டிக்கு இலங்கை காப்புரிமை பெற வேண்டுமென கலாநிதி சரித்த ஹேரத் பாராளுமன்றத்தில் கோரிக்கை
கொத்து ரொட்டிக்கான காப்புரிமையை இலங்கை பெற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரித்த ஹேரத் இன்று (08) நாடாளுமன்றில் முன்மொழிந்தார்.
இத்தாலியில் உள்ள பீஸா மற்றும் அமெரிக்காவின் ஹம்பர்கர்கள் போன்ற பிற நாடுகளின் பூர்வீக உணவுகளை போன்றே கொத்து ரொட்டியை மாற்றுவதற்கு இலங்கை செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
கொத்து ரொட்டி மட்டக்களப்பிலிருந்து தோற்றம் பெற்றதாகக் கண்டறியப்பட்டுள்ளதென தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹேரத், தற்போது அது ஐஸ்கிரீம் கொத்து உள்ளிட்ட பல வகைகளாக பரிணாமம் அடைந்திருப்பதாகத் தெரிவித்தார்.
இலங்கையின் பூர்வீக உணவுகளுக்கான காப்புரிமையை பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென தெரிவித்த அவர், அபிவிருத்தியடைந்த நாடுகளுடனான வர்த்தகத்தை வலுப்படுத்துவதற்கான வழிமுறையாக இதனைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.
இதன் மூலம் நாட்டின் ஏற்றுமதித் துறையை மேம்படுத்துவதுடன் இலங்கைக்கு சாதகமான தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்று கலாநிதி சரித்த ஹேரத் மேலும் சுட்டிக்காட்டினார்.
கொத்து ரோட்டியின் பிறப்பிடம் தமிழ்நாடு
ReplyDelete