Header Ads



நிதியமைச்சரின் ஆடைகளை அவிழ்க்கும் வீரவன்சவும் கம்மன்பிலவும் - எதிர்கட்சி தெரிவிப்பு


நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா இன்று(07) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்த கருத்துக்களின் சாரம்சம்.

இத்தருணத்தில் நாட்டு மக்கள் பெரும் துயரத்தையும் சுமையையும் சுமந்துள்ளனர்.  சுதந்திரத்திற்குப் பிறகு இந்த நாட்டின் தலைவர்களிடம் கைமாறிய பின் இன்று மீண்டும் வரிசை யுகம் ஆரம்பாகியுள்ளது.

இந்நாட்டு குடிமக்கள் பரம்பரை பரம்பரையாக கடன் சுமையை பெற்றுள்ளனர்.இன்று இந்த நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாகப் இவையனைத்தும் பொய்யெனக் கூறி பிரச்சினையை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எண்ணெய் தட்டுப்பாட்டால் மக்கள் பல நாட்களாக வரிசையில் நின்று எண்ணையை பெற முடியாமல் தவிப்பதைப் பார்த்திருக்கிறோம்.அது மக்களின் துயரம் மட்டுமின்றி பொருளாதாரத்துக்கும் ஏற்ப்பட்ட பாரிய அடியாகும் என்பதை அனைவரும் அறிவோம்.அறுவடை செய்ய விவசாயியிடம் எரிபொருள் இல்லை.மீனவனுக்கு கடலுக்குச் செல்ல எண்ணெய் இல்லை.மேலும், நாட்டின் ஏற்றுமதி தொழிலுக்கு, சுற்றுலா உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு எண்ணெய்களை வழங்க அரசாங்கம் தவறிவிட்டது. இப்போது பிரதமர் வந்து பேசுவதைப் பார்க்கும் போது இந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவில்லையா என்று கேட்க வேண்டியுள்ளது. இந்த சிக்கலை தீர்க்க வேண்டும். பிரச்சினைகள் வரும்போது, ​​அமைச்சரை நீக்கிவிட்டு, பிரச்சினையை தீர்க்காமல் விட்டுவிட்டு விடுவதல்ல உகந்த தீர்வு.மறுபுறம் அமைச்சர்களை குற்றம் சாட்டி தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அரசாங்கம் முயல்கிறது.எரிசக்தி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு பல நாட்கள் கடந்துள்ள போதிலும், இந்த நாட்டில் எண்ணெய் வரிசை பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை.  மின்வெட்டு பிரச்சனையில் அரசு எவ்வளவோ தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், மின்வெட்டுப் பணியை அரசாங்கம் தொடர்ந்து செய்து வருவதையே பார்க்கிறோம்.

இந்நாட்டின் ஏற்றுமதித் தொழில் எவ்வாறு முன்னோக்கிச் செல்வது, டொலர்களை வரவழைப்பது, சுற்றுலாத் துறை எவ்வாறு கையாள்வது,இந்த நெருக்கடியுடன் எவ்வாறான திட்டங்களுடன் முன்னேறுவது என்ற கேள்விகளுக்கு அரசாங்கம் சரியான பதிலைச் சொல்லத் தவறிவிட்டது.அன்னிய செலாவணி இல்லாததால் தான் இந்த பிரச்சினை வந்தது,இது சின்ன பிரச்சினை தான் என்று பல்வேறு அமைச்சர்கள் வந்து பேசுவதை பார்க்கிறோம்.இது சிறிய பிரச்சனையா என்று கேட்கிறோம்?  மத்திய வங்கிக்கு செவிசாய்க்காத அரசை எப்படி நம்புவது?மறுபுறம் மத்திய வங்கியில் சரி நம்பிக்கை உள்ளதா? மத்திய வங்கியின் ஆளுநரும் மற்ற அதிகாரிகளும் வந்து செய்தியாளர் சந்திப்புகளை நடத்துகிறார்கள்.  ஆனால் இவையெல்லாம் நாட்டில் நடப்பதை நாம் கண்டுகொள்வதில்லை.  எனவே, இந்த நாட்டை ஒரு கிறுக்குத்தனமான அரசாங்கமே ஆள்கிறது என்பதை மக்களிடம் கூற வேண்டும்.பெண்களின் குறைகளை ஒடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு தீர்வு காண அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

டொலர்கள் இல்லாத பிரச்சினையை வேறு நாட்டிலிருந்து கடன் வாங்கி எண்ணெய் பீப்பாய்களை அல்லது எரிவாயு கொல்களன்களை இறக்குமதி செய்வதன் மூலம் தீர்க்க முடியாது.இதனை எதிர்கட்சி என்ற ரீதியில் நாம் பல தடவைகள் தெரிவித்து வருகின்றோம்.அரசாங்கம் தீர்வொன்றை வழங்கத் தவறிய தரப்பினருடன் எவ்வாறு நாம் பெற்ற கடனை அடைப்பது,

பொருளாதாரத்தை எவ்வாறு மீட்டெடுப்பது, டொலர் நெருக்கடிக்கு அப்பால் சென்று தீர்வுகளை வழங்குவது எப்படி? இது பாரிய சிக்கலாகும்.

ஒரு நாடாக நாம் மீண்டும் அதற்கு முகம் கொடுக்க வேண்டும் என்று ஜெனிவா மனித உரிமைகள் பேரவை எச்சரிப்பதை இன்று காண்கிறோம்.கடந்த அரசாங்கத்தின் போது GSP+ சலுகையும், ஐரோப்பிய மீன் ஏற்றுமதியும் கிடைத்ததாலேயே பொருளாதாரம் இன்று இந்தளவில் சரி ஓடிக்கொண்டிருக்கிறது.GSP+, மீன் ஏற்றுமதி போன்ற சலுகைகளை அகற்றப்படுமா என்று அரசாங்கத்திடம் கேட்கின்றோம்.இவற்றை சீர்செய்து பலப்படுத்துவதற்கான சரியான கொள்கை இந்த அரசிடம் இல்லை. இந்த நாட்டில் ஜனநாயகம் முறையாக போனப்படவில்லை.

மேலும் ஈஸ்டர் தாக்குதல் நடந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிறது.தாக்குதல் தற்போது சர்வதேச அளவில் சென்று ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவைக்கு சென்று பரிசுத்த பாப்பரசருக்கும் தெரியப்படுத்தியுள்ளது.இன்று இந்த அரசாங்கமே இது இழுத்தடிப்புச் செய்கிறது.

 இன்று விமல் வீரவன்சவும் உதய கம்மன்பிலவும் இந்நாட்டின் நிதியமைச்சரின் ஆடைகளை அவிழ்ப்பதைப் பார்க்கின்றோம்.இருவரும் அரசாங்கத்தின் சகல விடயங்களுக்கும்

பாராளுமன்றத்திற்குள்ளேயே கையை உயர்த்தியதால் நான் மன்னிப்பு கேட்க வேண்டும்.அமைச்சரவை உட்பட அரசாங்கம் எடுத்த அனைத்து தீர்மானங்களையும் கூட்டாக விமர்சித்தவர்கள்.எனவே இந்த அரசாங்கத்தை பாதுகாப்பதற்கும் மக்களின் அழிவிற்கும் நீங்கள் பங்களித்தீர்கள் என்பதை நீங்களும் 11 கட்சிகளும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதை விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம். மற்றும் இந்த நாட்டின் பொருளாதாரம் சீரழிந்த போது 

இவர்களும் ஆதரவு வழங்கியவர்களே. 


இன்று ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்துள்ளது.இந்த இரண்டு நாடுகளுமே நமது தேயிலை தொழிலுக்கும், சுற்றுலாத்துறைக்கும் மிகவும் முக்கியமானவை.அதை எப்படி எதிர்கொள்வது என்ற பிரச்சினையை நம் நாட்டில் தீர்க்க அரசு இந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசாங்கம் எப்படி நாம் ஒன்றிணைந்து இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும், இந்த நாட்டு மக்களின் அழிவை நிறுத்துவதற்கும் ஒரு திட்டத்தை முன்வைக்க முடியும் என்பதில் கவனத்தை திருப்ப வேண்டும்.பிரச்சினையை தீர்க்க முடியும் என்று மக்களிடம் பொய் சொல்வதை நிறுத்துமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.

அரசாங்கம் சொல்வதை விட்டுவிட்டு கட்சிகளுடன் இணைந்து தீர்வு காணாவிட்டால் எமது நாடு இன்னும் ஆழமான பாதாளத்திற்கு சென்று இருக்க முடியாத நாடாக மாறிவிடும்.

டொலர் நெருக்கடி,ரூபாவின் பெருமதி வீழ்ச்சி, இதர அத்தியாவசியப் பொருட்கள், எரிவாயு, எல்லாமே சிக்கலில் உள்ளது.டொலர் பற்றாக்குறையால் எங்கள் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.  கையிருப்பு குறைந்துள்ளதையும் காண்கின்றோம், இந்த ஆண்டு செலுத்த வேண்டிய கடனை அடைக்க இந்த அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை.மார்ச் 15 முதல் கொழும்பில் மாபெரும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். அரசாங்கத்தின் குறைகளை அடக்கு முறை மூலம் அடக்க வேண்டாம் என அரசாங்கத்தை குறிப்பாக எச்சரிக்கின்றோம். அரசாங்கம் மக்களை வரிசையாக நிறுத்தியதால் மக்கள் கோபமடைந்துள்ளனர். அரசாங்கமும் மத்திய வங்கியும் இணைந்து ஒரு தீர்வுக்கான திட்டத்தை முன்வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் பொறுப்பு என எச்சரிக்கின்றோம்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட பல கட்சிகளை இந்த அரசாங்கம் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

அரசாங்கத்தின் கொள்கைகள் அமுல்படுத்தப்பட்டு மக்கள் நசுக்கப்படும் போது மௌனியாக இருந்து விட்டு தற்போது வெளியில் வந்து வேறு எதையாவது சொல்லி மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். அரசாங்கத்திற்குள்ளேயே இருந்து சலுகைகளை அனுபவித்து அரசாங்கத்தின் சொந்த பிரச்சினைகளுக்கு கையை உயர்த்தி வெளியில் வந்து மைக் டைஸ் ஆக வேண்டும் என்று அந்த தரப்புக்கு கூறுகிறோம்.

டொலர்கள் இல்லாத நிலையில் இந்த நாட்டில் வீதிகள் கார்பெட் போடப்படுகிறது. ஆனால் பணம் இல்லை என மக்கள் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படுகின்றனர்.இதனால் நாட்டில் பொருளாதார பிரச்சினைகள் மேலும் அதிகரிக்கின்றது.எனவே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் போன்ற நிறுவனங்கள் சுமைகளை சுமத்தி வருகின்றன.பல வருடங்களாக அரசாங்கத்தை நஷ்டத்தில் தள்ளும் பாரிய நட்டத்தை கொண்ட நாடு ஒவ்வொரு முறையும் எடுக்கப்படும் நடவடிக்கைகளை பார்க்கும் போது எரிபொருளின் விலையை உயர்த்தும் போது CPC நஷ்டம் என்று கூறுவதுடன் மின்சார கட்டணம் அதிகரிக்கும் போதும் அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் இது வெளிப்படுகிறது.

அந்நிய முதலீடு நாட்டிற்கு வராமல் தடை பட்டுளளது.அந்நிய முதலீட்டை மட்டுமின்றி நலிவடைந்து வரும் ரூபாய் பொருளாதாரத்தையும் நலிவடையச் செய்யும் இவை அனைத்தும் நம் நாட்டு மக்களுக்கு தெரியும் என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.