எதிர்க்கட்சித் தலைவருக்கு ராமன்ய மகா நிகாயவினால் ஜனரன்ஜன கௌரவ நாமம் வழங்கி வைப்பு
ஸ்ரீ லங்கா ராமன்ய மகா நிகாயவினால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு இன்று (11) சாசன கீர்த்தி தேசாபிமானி ஸ்ரீலங்கா ஜனரஞ்சன கௌரவ நாமம் வழங்கிவைக்கப்பட்டது.
சமூக, கலாச்சார மற்றும் சமய ரீதியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற தொடர்ச்சியான சேவைகள் விசேடமாக பாராட்டப்பட்டதோடு அப்பணிகளை கௌரவிக்கும் முகமாக ஸ்ரீலங்கா ராமன்ய மகா நிகாயவினால் இக்கௌரவ நாமம் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற அமைச்சராக, பிரதி அமைச்சராக, அமைச்சராக மற்றும் தற்போது எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச அவர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற பணிகள் விசேடமாக கவனிக்கப்பட்டது.
கடந்த ஆட்சியின்போது மிகக்குறுகிய காலம் கலாச்சார அமைச்சராகவும் சேவையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் அக்காலகட்டத்தில் சமய மற்றும் கலாச்சார அமைச்சராக மிக முக்கியமான பல சேவைகளை ஆற்றினார்கள்.
சசுனட அருன, சிசு தகம் செவன,எதிர்க்கட்சியின் மூச்சு, பிரபஞ்சம் போன்ற வேலைத்திட்டங்கள் ஊடாக பாரிய சேவைகளை ஆற்றிக்கொண்டுள்ள சஜித் பிரேமதாச அவர்கள் இதற்கு முன்னர் ஷியாமோபாலி மகா நிகாயாவின் மல்வத்து பிரிவினால் சாசன தீபனா அபிமானி ஸ்ரீலங்கா ஜனரஞ்சனா நாமம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வுக்கு இலங்கை ராமன்ய நிகாயவின் மகாநாயக்க தேரர் அக்கமஹா பண்டித மகுலேவே விமலாபிதான தேரர் உட்பட மகா நாயக்க தேரர்கள் இந்த நிகழ்வுக்கு சமூகமளித்ததுடன்,முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஒரு ஜனரஞ்சனவிலும் எந்தப் பிரயோகனமும் இல்லை. நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு வழங்க முன்னின்று உழைப்பது தான் எதிர்க்கட்சியின் பிரதான நோக்கமாக அமைய வேண்டும். அதுதவிர உள்ள அனைத்து பம்போரிகளும் செவிடன் காதில் ஊதிய சங்கு மட்டும்தான்.
ReplyDelete