Header Ads



திலும் அமுனுகமவுக்கு முழு அமைச்சர் பதவியா..? மற்றுமொரு அமைச்சரும் இராஜினாமா செய்ய உள்ளாரா..??


போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக கடமையாற்றும் திலும் அமுனுகம, போக்குவரத்து அமைச்சரவை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய இன்று (04) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்க அமைச்சுகளில் நேற்று மாற்றம் செய்யப்பட்ட வேளை, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தமது அமைச்சுபதவிகளில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதேவேளை, வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவும் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments

Powered by Blogger.