Header Ads



வீட்டை விட்டு வெளியே சென்றால், நெருக்கடி எப்படி உள்ளது என்பது அனைவருக்கும் புரியும்


நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன இன்றைய(02) ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களின் ஒரு பகுதி.

இன்று நெருக்கடியைப் பற்றி பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றால், நெருக்கடி எப்படி உள்ளது என்பது அனைவருக்கும் புரியும்.ஒரு நபர், எண்ணெய் எடுக்க ஆறு நிரப்பு நிலையங்களுக்குச் சென்றார், ஆனாலும் அவரால் அது முடியவில்லை என்று கூறினார்.இன்று இலங்கை எங்கும் டீசல் வரிசைகள்.வாகனங்களில் டீசல் இல்லை. ரூ.3,000 க்கு கொள்வனவு செய்வதாக இருந்தால் கொடுக்கலாம் என்று பதாகை  இருந்தது. நாட்டில் எரிபொருளும் இல்லை. தொலைபேசிகளுக்கு ரீலோட் செய்ய முடியாது.இதிலிருந்து விடுபடத்தான் இவ்வளவு காலமும் நாம் சாத்தியமான வழிகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம், தவறான கொள்கைகளை பின்பற்றுகிறார்கள் என்று தோன்றுகிறது.சரியான பாதைக்கு திரும்புங்கள்.

மத்திய வங்கியின் ஆளுநர் ஒரு நாள் ஒன்றை கூறுகிறார், மற்றொரு நாள் மற்றொரு விடயத்தையும், காலையில் ஒன்றையும் மாலையில் இன்னொன்றையும் கூறுகிறார்கள். நாள் இந்த மக்கள் உண்மையில் என்ன சொல்கிறார்கள் என்று யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாது.  நெருக்கடிக்கு எவ்வாறு பதிலளிக்கிறது என்பது பற்றி தீர்வு காண வேண்டும். எதிர்க்கட்சியின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுங்கள்.உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கியின் முதன்மைப் பொறுப்பு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகும்.ஆனால் எமது நாட்டின்  மத்திய வங்கியினால் அதை பேன முடியவில்லை. வங்கி அமைப்பை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் நிதி அமைப்பை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி அவர்கள் பேச வேண்டும்.நாம் சொல்வதை இன்று பொது வெளியில் சொல்வதில்லை, ஒன்றரை வருடமாக சொல்லி வருகிறோம், அதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

எமக்கு ஒரு பெரிய பிரச்சினை உள்ளது.சமீபத்தில் எழுந்துள்ள பிரச்சினை என்னவென்றால், இலங்கையின் தேயிலையில் சுமார் 10% ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் செல்கிறது.நிச்சயமாக அனுப்ப வேண்டும்.  அடிப்படையில் மொத்த பொருளாதாரத்தையும் சரியாக நிர்வகித்தால் பலனடையலாம். சர்வதேச தொடர்புகள் முறையாக பேனப்படாவிட்டால் உலகில் பொறுப்பற்ற விடயங்கள் நடக்கும்.உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பிரச்சினை உள்ளது.அதில் எங்களால் எதுவும் செய்ய முடியாது.இது வெளி விடயம், ஆனால் அது நம்மை பாதிக்கிறது,முழு பொருளாதாரத்தையும் சரியாக நிர்வகித்தால், அதை நிர்வகிக்க முடியும், ஆனால் இவர்கள் சாதாரண விடயங்களைக்கூட சரியாகக் கட்டுப்படுத்துவதில்லை,எனவே வெளிப்புற பிரச்சினைக்கு பதிலளிக்க வழியில்லை.

மேலும், ஒரு பீப்பாய் எண்ணெயின் சராசரி மதிப்பு 100 டொலர்கள் என்று பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நேற்று தெரிவித்தது. நாடுகளின் தேவை அதிகமாக இருப்பதால் எங்கு விலை ஏறும் என்று தெரியவில்லை.இவைகளை அரசாங்கம் யோசிக்கிறதா என்று தெரியவில்லை.  இன்னும் 10% ,15%,மற்றும் 20% உயர்வு உலக சந்தையில் இருக்கலாம்.அது எப்படி நம்மை பாதிக்கும்?என்று கோட்க வேண்டும். கொள்கைகள் மட்டுமல்ல, நிர்வாகமும் சீராக அமைய வேண்டும்.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கைக்காக நாங்கள் எப்போதும் காத்திருக்கிறோம், இது உண்மையாக இருக்க வேண்டும்.நாமும் விரும்புகிறோம்.கோவிட் காரணமாக இந்த நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.ஆனால், நமது அண்டை நாடுகளான மாலத்தீவுகளுக்கு என்ன நடந்தது, அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வியப்பளிக்கிறது.

இந்த நெருக்கடிகளை கோவிட்க்குள் மறைக்க முயற்சிக்க வேண்டாம் என்பதை நாங்கள் எங்கள் அரசாங்கத்திற்கு தெளிவாகக் கூறுகிறோம்.இந்த நெருக்கடியின் விளைவாக எதிர்காலத்தில் ஏற்ப்பட போகும் எண்ணெய் விலை அதிகரிப்பு, எரிவாயு விலை அதிகரிப்பு, கோதுமை மா அதிகரிப்பு பற்றி அரசாங்கம் சிந்திக்க வேண்டும்.அதற்கு மத்திய வங்கியே பொறுப்பாகும்.கடனை அடைப்பதற்கு முன்னுரிமை கொடுப்பதை விட, மருந்து, அத்தியாவசிய உணவு, எண்ணெய் செலவுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறுகிறோம்.கடனாளர்களை மேசைக்கு வரவழைத்து போசுங்கள்.

அவர்களிடம் பேசினால் அவர்கள் ஒப்புக்கொண்டு அரசாங்கத்தின் நம்பிக்கையை வெல்வார்கள். இப்போது செய்வது மிகவும் தாமதமானது என்று பலர் கூறுகிறார்கள்,ஆனால் இப்போது தாமதிக்காமல் செய்தால் எரிபொருள் கட்டணத்தை செலுத்தலாம்.

இந்தக் கேள்விகளுக்கு அரசாங்கத்திடமிருந்து சரியான பதில் கிடைப்பதில்லை.நிதி அமைச்சர் பாராளுமன்றத்திற்கு கூட வருவதில்லை என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.