Header Ads



இலங்கையில் முதலையினத்துக்கு அச்சுறுத்தல்


நாட்டிலுள்ள சில நீர்நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் முதலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெற்காசிய மற்றும் ஈரான் முதலை தொடர்பான விசேட குழுவின் தலைவர் கலாநிதி என். அஸ்லம் டி சில்வா தெரிவித்துள்ளார்.

வனஜீவராசிகள் திணைக்களத்தினருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளுக்கு அமைய நாட்டில் தற்போது சுமார் 8,000 முதலைகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் மனித - முதலை மோதல் தொடர்பில் 170 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய 510 க்கும் அதிகமான முதலைகள் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார்.

மனிதர்களினால் மேற்கொள்ளப்படும் துப்பாக்கி பிரயோகம் மற்றும் விஷம் வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகள் காரணமாக குறித்த முதலைகள் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

அத்துடன் பல்லியினத்தைச் சேர்ந்த உடும்புகளும், முதலைகளின் முட்டைகள் - குட்டிகளை வேட்டையாடுதல் அதிகரித்துள்ளமையின் காரணமாகவும், முதலையின அழிவுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.