உக்ரைன் - ரஷியா இன்று பேச்சு, எர்டோகன் மத்தியஸ்தராக இருப்பார்
உக்ரைன் மற்றும் ரஷிய வெளியுறவு மந்திரிகள் இன்று சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதில் துருக்கி அதிபர் எர்டோகன் மத்தியஸ்தராக இருப்பார் என தெரிய வந்துள்ளது.
இரு நாடுகள் இடையே சமரசம் ஏற்படுத்த இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் உதவிக்கரம் நீட்டுகிறார். அவர் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் நேற்று தொலைபேசியில் பேசினார். வரும் சனிக்கிழமை ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை நேரடியாக சந்தித்து பேச உள்ளார்.
எனவே ரஷியா, உக்ரைன் போர் அடுத்த சில நாட்களில் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மிகப் பொருத்தமான மத்தியஸ்தர், அல்லாஹ்தஆலா அன்னாரின் பணியை இலகுவாக்கி அதில் வெற்றியையும் வழங்குவானாக என இருகரமேந்திப் பிரார்த்தின்றோம்.
ReplyDelete