Header Ads



ரணில் எனது சிறந்த நண்பர், தேசிய அரசாங்கமொன்றை ஏற்படுத்தப்போவதில்லை - மகிந்த


ரணில் எனது சிறந்த நண்பர் ஆனால் தேசிய அரசாங்கமொன்றை ஏற்படுத்தப்போவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச சகோதரர்களும் ஐக்கியதேசிய கட்சியின் தலைவரும் தேசிய அரசாங்கம் குறித்து ஆராய்கின்றனர் இதில் ரணில்விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகிப்பார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச  இது குறித்த தகவல்களை உறுதியாக நிராகரித்துள்ளார்.

அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நானும் விக்கிரமசிங்கவும் மிகச்சிறந்த நண்பர்கள் என தெரிவித்துள்ள அவர் ஆனால் எங்கள் அரசியல் கொள்கைகள்  வேறுபட்டவை இதனால் தேசிய அரசாங்கமொன்றை ஏற்படுத்த முடியாது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவை பாராட்டியுள்ள அவர், தற்போதைய நெருக்கடிகளின் மத்தியில் தேசிய அரசாங்கத்தை பற்றி எந்த கட்சியுடனும் ஆராயவில்லை எனக்குறிப்பிட்டுள்ளதுடன் அரசாங்கம் நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளிற்கு தீர்வை காணும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.