Header Ads



பசிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையா..?


நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி பரிசீலித்து வருகிறது. அந்த கட்சியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை, பொது மக்கள் மத்தியில் அது ஏற்படுத்தியுள்ள தாக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க நிதி அமைச்சர் தவறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பசில் ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவது குறித்து கட்சி பரிசீலித்து வருவதாக ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் தற்போது உள்ளக கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடு பாரிய நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள போதிலும், டிசம்பர் 10ம் திகதி முதல் நாடாளுமன்றத்தில் உரையாற்றத் தவறியமைக்காக நிதியமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  

2 comments:

  1. நாட்டு மக்கள் தற்போது எதிர்நோக்கும் அத்தனை பிரச்சினைகள், நெருக்கடிக்குப்பின்னால் இருக்கும் பிரதான சூத்திரதாரன் பஸில் என்ற அடிப்படையில் அவரை பாராளுமன்றத்தில் இருந்து விரட்ட அத்தனை கட்சிகளும் சேர்ந்து ஒரு சரியான திட்டமிட்டால் அது சாத்தியமாகும். அது தவிர தற்போதைய மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு உடனடித்தீர்வு இல்லை.

    ReplyDelete
  2. நாட்டு மக்கள் தற்போது எதிர்நோக்கும் அத்தனை பிரச்சினைகள், நெருக்கடிக்குப்பின்னால் இருக்கும் பிரதான சூத்திரதாரன் பஸில் என்ற அடிப்படையில் அவரை பாராளுமன்றத்தில் இருந்து விரட்ட அத்தனை கட்சிகளும் சேர்ந்து ஒரு சரியான திட்டமிட்டால் அது சாத்தியமாகும். அது தவிர தற்போதைய மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு உடனடித்தீர்வு இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.