Header Ads



துபாயில் உலக பொலிஸ் மாநாட்டில் சரத் வீரசேகர


பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர, துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் மொஹமட் பின் ரஷீத் அல் மக்தூமை நேற்று முன்தினம் (14) உலக பொலிஸ் உச்சிமாநாட்டில் சந்தித்தார்.  

 அமைச்சர் சரத் வீரசேகர INTERPOL தலைவர் Dr. Ahamed Naser Al Raisi, துபாய் பொலிஸ் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல்லா அல் மர்ரி மற்றும் துபாயில் உலக பொலிஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பொலிஸ் தலைவர்களையும் சந்தித்தார்.  

 குற்றங்கள், பயங்கரவாதம் மற்றும் பிற அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கான சட்ட அமுலாக்க ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை குறித்து பொலிஸ்துறைத் தலைவர்களின் வருடாந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. உலக பொலிஸ் உச்சிமாநாடு மன்றம் என்பது காவல் துறையின் தரத்தை மேம்படுத்துவதற்கான முன்னணி உலகளாவிய தளமாகும்.  பிரதிப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான லெப்டினன்ட் ஜெனரல் ஹிஸ் ஹைனஸ் ஷேக் சைஃப் பின் சயீத்அல் நஹ்யானை இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.     டிசம்பர் 2021 முதல், இலங்கை - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சட்ட அமுலாக்க ஒத்துழைப்பு மேம்படுத்தப்பட்டு வருவது இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. 

2 comments:

  1. Who approved visa to this guy. He is wanted by UK

    ReplyDelete
  2. World police summitக்கு எந்தவகையிலும் தகுதியில்லாத நபர் ஒருவர் இருப்பது தௌிவாகத் தெரிகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.