Header Ads



'வியத் மக' தோல்வியடைந்துவிட்டது, கம்மன்பில செவ்வி கொடுப்பதை நிறுத்த வேண்டும்


“வியத் மக“ அமைப்பு அரசியல் ரீதியாக தோல்வியடைந்துள்ளது என்பதால், அது பற்றி பேசுவதில் பயனில்லை எனவும் நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வுகாண டியூ. குணசேகர போன்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளில் உள்ள புத்திஜீவிகள் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

வியத் மக தோல்வியடைந்துள்ளது. அது பற்றி பேசுவதில் பயனில்லை. நாட்டில் உள்ள புத்திஜீவிகளை பயன்படுத்தி பயனை பெறவேண்டும். அமைச்சர் உதய கம்மன்பிலவும் தோல்வியடைந்து விட்டார்.

எரிசக்தி அமைச்சர் என்ற வகையில் உதய கம்மன்பில ஊடகங்களுக்கு செவ்வி கொடுப்பதை நிறுத்தி விட்டு, அமைச்சர் என்ற வகையில் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.

மக்கள் படும் கஷ்டத்தை நானும் அனுபவித்து வருகின்றேன். இதனால், அந்த கஷ்டம் குறித்த சிறந்த அனுபவம் உள்ளது. ஊடகங்களிடம் பேசுவதை நிறுத்தி வட்டு. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியில் இருக்கும் தீர்வுகளை வழங்கக் கூடியவர்களை இணைந்து நாடு எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார். (TW)

No comments

Powered by Blogger.