Header Ads



வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள், நாட்டுக்கு பணம் அனுப்புவதில்லை என இராஜாங்க அமைச்சர் கவலை


வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் எவரும் இலங்கைக்கு பணம் அனுப்புவதில்லை என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

ஏராளமான இளைஞர்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருவதாகவும், அவர்கள் தங்கள் பணத்தை அங்கேயே வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் பொருட்களின் விலை அதிகரிப்பை தாம் விரும்பவில்லை எனவும், கூடிய விரைவில் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ibc

2 comments:

  1. வெளிநாட்டுக்கு போனானவர்களை சும்மாவா அனுப்பினார்கள்? அவர்களிடம் கண்டதட்கெல்லாம் புடுங்கி விட்டுதானே அனுப்பினார்கள், போனவர்களுக்கு ஏதாவது சலுகைகள் மரியாதைகள் உண்டா? இல்லவே இல்லை. போதாதற்கு உங்கள் எம்பசிக்களாவது அவர்களுக்கு அங்கு ஆதரவாக மரியாதையாக நடக்கிறதா? வெளிநாடுகளில் ஆகவும் கேவலமான எம்பசி உங்கள் எம்பசிகள் மட்டுமே. இது தெரியுமா உங்களுக்கு பிச்சை காரணுகளே?

    ReplyDelete
  2. கொரோனா காலத்தில சொந்த நாட்டு மக்களுக்கு கதவை மூடி வெளிநாட்டனுக்கு தொறந்திக இப்ப அவன்கிட்ட காசி மட்டும் தேவைப்படுது, அனுப்ப மாட்டானுகள்

    ReplyDelete

Powered by Blogger.