Header Ads



கோட்டாவையும், பசிலையும் அமெரிக்காவிற்கே கூட்டி செல்லுங்கள் - திரைப்பட கலைஞர் விஸ்வ லங்காவின் உருக்கமான வேண்டுகோள் (வீடியோ)


தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாராண சூழ்நிலையின் காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மகனிடம், உங்கள் “அப்பாவை அமெரிக்காவிற்கே கூட்டி செல்லுங்கள்” என திரைப்பட கலைஞர் விஸ்வ லங்கா காணொளி மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில், 


"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மகன் பார்க்கவேண்டும் என்று நான் இந்த காணொளியைப் பதிவேற்றுகிறேன்!  உங்களை எப்படி அழைப்பதென்று தெரியவில்லை நான் நண்பர் என்றே அழைக்கிறேன். நண்பரே,  இலங்கை மக்கள் எங்களுக்காக, நீங்கள் இந்த தருணத்தில் செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி ஒன்று தான். அது உங்கள் தந்தையை மீண்டும் அமெரிக்காவுக்கே மீள அழைத்துக்கொள்ளுங்கள்.

இந்த தருணத்தில் நாம் ஒரு நாடாக, ஒரு இனமாக விழக்கூடிய மட்டத்திற்கு விழுந்திவிட்டோம்!

எங்களுக்கு இனி எழமுடியாது! புரியும் படியாக சொல்லவேண்டுமானால் நாங்கள் வங்குரோத்து அடைந்து விட்டோம். எங்களுக்கு எரிவாயு இல்லை, எரிபொருள் இல்லை, மின்சாரம் தடை செய்யப்படுகின்றது, உணவு இல்லை,  தற்போது அத்தியாவசியமான நிறைய உணவு வகைகள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படி நிறைய நெருக்கடிகளுக்கு நாம் முகம்கொடுத்துக்கொண்டுள்ளோம்.

இந்த நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது, இவ்வாறானதொரு நிலைமையை உருவாக்கியது வேறு யாரும் இல்லை உங்கள் தந்தை தான், உங்கள் தந்தை கோட்டாபய ராஜபக்ஷ, அவருடைய தம்பி, உங்கள் சித்தப்பா, பசில் ராஜபக்ஷவும் தான் இந்த நிலைமைக்கு காரணம்.

நீங்கள் செய்யவேண்டியது இதுதான், உங்கள் தந்தைக்கு பேசி ,

''அப்பா, இலங்கை போன்ற ஒரு நாட்டை உங்களுக்கு ஆழ முடியாது,  உங்களுக்கு இந்த வேலையை செய்யமுடியாது, அதனால், அதை கைவிட்டு சித்தப்பாவையும் பசில் ராஜபக்ஷவையும் அழைத்துக்கொண்டு நீங்கள் மீண்டும் அமெரிக்காவுக்கு வந்துவிடுங்கள்! அந்த மக்களுக்கு ஏதாவது மிஞ்சி இருந்தால் அதை வைத்து அவர்கள் பிழைத்துக்கொள்ளட்டும் நீங்கள் வந்துவிடுங்கள்'', என்று சொல்லுங்கள்.

இப்படியே சென்றால், மேலும் நிலைமை மோசமாகிவிடும்.

எனக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். உங்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. ஒரு தந்தையாக நீங்கள் செய்யவேண்டியதை பெரியளவில் செய்கின்றீர்கள். நாமும் எமக்கு முடிந்த வகையில் செய்கின்றோம்.

எமது நாட்டில் ஒரு நாள் சம்பளத்திற்கு வேலை செய்து உழைத்து அன்றாட உணவை தேடிக்கொள்ளும் மக்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்களுடைய பிள்ளைகளின் நாளைய எதிர்காலம் பற்றி அவர்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை,  நாளை அந்த பிள்ளைகள் வாழ்வதற்கு இந்த நாடு மிஞ்சுமா என்பதிலேயே அவர்களுக்கு சந்தேகம். அதனால் நாம் படு குழியில் விழுந்து விட்டோம்.

ஆகவே நான் மீண்டும் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் நண்பா, உங்கள் தந்தைக்கு பேசி, அவருடைய தம்பியையும் அழைத்துக்கொண்டு அமெரிக்காவுக்கு வரச்சொல்லுங்கள்,

அதன் பின்னர் எமக்கு முடியுமான வகையில் நாட்டை ஒரு வழிக்கு கொண்டு வர முடியும். இப்படியே சென்றால் எமக்கு இன்னும் படுமோசமான நிலை ஏற்படும்.

உங்கள் சித்தப்பாவுக்கு தான் நாட்டை அபிவிருத்தி செய்ய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, ஆனால் உங்கள் சித்தப்பாவின் செயற்பாடுகளின் பெறுபேறு எப்படி அமைந்ததென்று நீங்களே பார்த்துக்கொண்டீர்கள் தானே! ஆகவே முடிந்தளவு விரைவாக கோட்டாபய ராஜபக்ஷவையும் பசில் ராஜபக்ஷவையும் அமெரிக்காவிற்கு அழைத்துக்கொள்ளுங்கள். எங்களுளால் முடிந்தவரை நாம் வாழ்ந்து கொள்கின்றோம்.

இன்று கோட்டாபய ராஜபக்ஷ பாதையில் சென்றால் அவரோடு மக்கள் முரண்படுகின்றார்கள், அவரை ஏசுகின்றார்கள், அவருக்கு பைத்தியம் என்கிறார்கள், உனக்கு செய்ய முடியாது இங்கிருந்து போ என்கின்றார்கள். அந்த நிலைமைக்கு உங்கள் தந்தை ஆளாகியுள்ளார். மக்கள் சாபம் விடுகின்றார்கள், 7 ஜென்மத்துக்கும் சாபம் விடுகின்றார்கள், அது உங்களுக்கும் சாரும், அப்படியெல்லாம் நடக்க தேவையில்லை நண்பா!

நாட்டின் ஒரு ஜனாதிபதி நாட்டு மக்கள் முன்னிலையில் இப்படி அசிங்கப்படக்கூடாது. அதனால் தந்தைக்கு பேசி சொல்லுங்கள் அவரை, பசில் ராஜபக்ஷவையும் கூட்டிக்கொண்டே அமெரிக்காவுக்கு வர சொல்லுங்கள். உடனடியாக இதை செய்யுங்கள். ஒரு நண்பனாக, ஒரு தந்தையாக நான் இதை உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன், என தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.