Header Ads



அரசாங்கமே கறுப்புச் சந்தையை உருவாக்கியுள்ளது - சுனில் ஹந்துனெநத்தி


ராஜபக்ச ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதாக ஜே.வி.பி.யின் சிரேஸ்ட உறுப்பினர் சுனில் ஹந்துனெநத்தி தெரிவித்துள்ளார்.

அம்பலாந்தொட்டை நகரில் நடைபெற்ற போராட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாம் தொடர்ச்சியாக அரசாங்கத்திடம் கூறினோம், டொலர் பெறுமதியை மிதக்க விடாது கட்டுப்படுத்த கூடாது என்று.

மத்திய வங்கியில் டொலர்கள் இல்லை அப்படி என்றால் ஏன் நாம் அதனை பிடித்துக் கொண்டிருக்க வேண்டுமென கோரினோம்.

அரசாங்கமே உண்மையில் கறுப்புச் சந்தையை உருவாக்கியுள்ளது. அரசாங்கம் தனக்கு தேவையானவர்களுக்கு சலுகை வழங்கவே இவ்வாறு கறுப்பு சந்தையை உருவாக்கியுள்ளது.

இன்று அரசாங்கமே டொலர் பெறுமதியை மிதக்கச் செய்துள்ளது. இன்று இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தங்களது நண்பர்களுக்கு பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிப் பத்திரம் வழங்கவே இவ்வாறு வரையறைகளை அரசாங்கம் விதித்துள்ளது.

அரசாங்கம் இந்த நாட்டு மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும், நாட்டின் உண்மை நிலைமைகளை வெளிப்படுத்த வேண்டும்.


ராஜபக்ச அரசாங்கம் முடிந்து விட்டது, இன்று வீதியில் இறங்கிய மக்கள் ராஜபக்சக்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் வரையில் போராடுவார்கள், மக்கள் ஆட்சியொன்று நிறுவப்படும் என எச்சரித்துள்ளார்.

No comments

Powered by Blogger.