Header Ads



மின்சாரத்தில் ஓடும் முச்சக்கர வண்டியினை கண்டுபிடித்து பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர்கள் சாதனை


- அஸ்ஹர் இப்றாஹிம் -

பேராதனை பல்கலைக் கழக பொறியியல் பீட பேராசிரியர்கள் மின்சாரத்தில் ஓடும் முச்சக்கர வண்டியினை கண்டுபிடித்துள்ளனர்.

பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட பேராசிரியர்களான ஜானக ஏக்கநாயக மற்றும் லினத சமரநாயக ஆகிய இருவரும் இணைந்து இதனை தயாரித்துள்ளனர்.

என்ஜின் இல்லாத, மாறக்கூடிய சூரிய சக்தியில் இயங்கக்கூடிய இம் முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு தரம் இம்முச்சக்கர வண்டியை மின்சாரத்தில் சார்ச் ஏற்றினால் 60 கிலோ மீற்றர் வரை பயணிக்க முடியும் எனவும், இதனை வியாபார ரீதியில் அறிமுகப்படுத்தும் போது மேலதிகமான அனுகூலங்களை இதற்கு பயன்படுத்தலாம் எனவும் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்

இம் முச்சக்கர வண்டியினுள்  உள்ள மின்கலம் 20 நிமிடங்களில் சார்ச் ஆகி விடும் எனவும் இவர்கள் மேலும் தெரிவித்தனர்.

1 comment:

  1. Copy of Indian.... Electric vehicles already are in the market before these duo invention.lol

    ReplyDelete

Powered by Blogger.