Header Ads



இலங்கையில் காகிதத்திற்கும் தட்டுப்பாடு


டொலர் தட்டுப்பாடு காரணமாக நகல் எடுக்கப் பயன்படுத்தப்படும் காகிதத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால், நகல் எடுக்கப் பயன்படுத்தப்படும் காகிதங்களின் தேவை சுமார் 150 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதேவேளை, காகிதங்கள் கிடைக்காததால் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சில காகிதப்பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

500 ரூபா தொடக்கம் 600 ரூபா வரையில் இருந்த ஒரு மூட்டை புகைப்பட பிரதி காகிதங்கள் தற்போது 1200 முதல் 1500 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. 

No comments

Powered by Blogger.