Header Ads



உங்களுடைய மனது நோக்குமாறு ஏதாவது தெரிவித்திருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுகிறேன்


கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், சர்வக்கட்சிக் கூட்டம் நடைபெறுகின்றது. இதில், ஐக்கிய ​தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டார்.

அங்கு கருத்துரைத்த ரணில் விக்கிரமசிங்க, உண்மையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேண்டுகோளின் பேரிலேயே இந்த சர்வக்கட்சி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனது பழைய நண்பனான, நிமல் சிறிபாலடி சில்வா, இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு என்னை அழைத்தார்.

கட்சி செயற்பாடுகள் மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக இந்தக் கூட்டத்தை பயன்படுத்தக்கூடாது எனக் கேட்டுக்கொண்ட ரணில், நாட்டின் இன்றைய நிலைமைக்கு கடந்த ஆட்சிதான் காரணமென மத்திய வங்கியின் ஆளுநர் கருத்துரைத்திருந்தார். அதற்கு நான் பதிலளித்திருந்தேன். இன்னும் பதிலளிக்கவேண்டுமாயின் பதிலளிப்பேன்.

நாடு முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி நல்ல தீர்மானத்தை எடுக்கவே இங்கு வந்துள்ளோம். இறுதியாக விஜய மன்னன் வந்தார். அவர், இலங்கைக்கு வந்திருக்காவிடின் இந்தப் பிரச்சினை இருக்காது என்றும் ரணில் கூறினார்.

நாங்கள் வேறு கொள்கையில் சென்றுகொண்டிருந்தோம் அந்தக்காலத்தில், பெட்ரோல் இருந்தது மக்களுக்கு சாப்பிடவும் இருந்தது. எதிர்க்கட்சியில் ஒரு பிரிவினர் வரவில்லை. நான் வந்திருக்கின்றேன். அவர்களை தோல்வியுறச் செய்வதற்காக நான் இவ்விடத்துக்கு வரவில்லை. அவர்களையும் இணைத்துக்கொண்டு பயணிப்போம்.

அதன்பின்னர், கருத்துரைத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உங்களுடைய மனது நோக்குமாறு ஏதாவது காரணத்தை தெரிவித்திருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்.   யார் மீதும் குற்றஞ்சாட்ட வரவில்லை, உண்மையில் பிரச்சினைக்குத் தீர்வு காணவும், சகலருடைய கருத்துகளையும் கேட்டுக்கொள்ளவே அழைத்தேன் என்றார்.

No comments

Powered by Blogger.