ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகிய விமலின் சகா - சூழ்ச்சிக்கார்களிடம் இருந்து அரசாங்கத்தை விடுவிக்கவேண்டும் என்கிறார்
சூழ்ச்சிக்கார்களிடம் இருந்து அரசாங்கத்தை விடுவிக்கவேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
அரசாங்கத்தின் ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகிய ஜயந்த சமரவீர இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இந்தக்கோரிக்கையை விடுத்தார்.
அரசாங்கம் இன்று 1977 ஆம் ஆண்டு காலத்துக்கு சென்றுக்கொண்டிருக்கிறது.
அன்று ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கம் தோல்வியடைவதற்கு பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க எவ்வாறு காரணமாக இருந்தாரோ, அதேபோன்று இன்று மேலைத்தேய விருப்பத்துக்கு இணங்க அரசாங்கம் தோல்வியை நோக்கி செல்வதற்கு காரணமாக இருப்பவர் தொடர்பில் அனைவருக்கும் தெரியும் என்று சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் அரசாங்கத்தை சரியான வழிக்கு இட்டுச்செல்வதற்காக கடந்த 2ஆம் திகதி தேசிய சுதந்திர முன்னணி, யோசனை ஒன்றை முன்வைத்த நிலையில் அதனை பரிசீலிக்காமல், அமைச்சர் விமல் வீரவன்சவை அரசாங்கம் பதவியில் இருந்து நீக்கியதாக அவர் குற்றம் சுமத்தினார்
எனவே அரசாங்கத்தில் பதவிகளை வகித்த தேசிய சுதந்திர முன்னணியின் அனைத்து உறுப்பினர்களும் விலகிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
Post a Comment