Header Ads



தரமற்ற எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது எனக் கூறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென எச்சரிக்கை


தரமற்ற வகையிலான எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருவதாக பிரசாரத்தை முன்னெடுத்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 

அதன்தலைவர் சுமித் விஜேசிங்க இன்று (29) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில், தரம்குறைந்த எரிபொருள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுவிக்கப்படவில்லை என குறிப்பிட்டார். 

கப்பலுக்கு ஏற்றப்படும் போது எரிபொருளின் தரம் குறித்து ஆராயப்படுவதுடன், இரசாயன அறிக்கையும் பெறப்படும். 

பின்னர் கொழும்புத் துறைமுகத்தை கப்பல் வந்தடைந்ததும் எரிபொருள் மாதிரிகள் பெறப்பட்டு, இரண்டு ஆய்வு கூடங்களில் ஆராயப்படும். இதனையடுத்து, எரிபொருளை நாளாந்தம் விடுவிப்பதற்கு முன்னர் மொத்த களஞ்சியசாலைகளின் குதங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். 

இவ்வாறான செயற்பாடுகளின் பின்னரே, எரிபொருள் விநியோகிக்கப்படும். எனவே போலியான பிரசாரங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சட்ட ஆலோசனைகள் பெறப்படவுள்ளதாக சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.