Header Ads



அரசாங்கம் வீழ்ந்துள்ள சந்தர்ப்பத்தில், துப்பாக்கியால் முடியாததை, டொலர் மூலம் செய்யும் எதிர்பார்ப்பிலே தமிழ்த் கூட்டமைப்பு


துப்பாக்கியால் செய்ய முடியாததை டொலரினால் செய்துகொள்ளும் எதிர்பார்ப்பிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்றதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சித் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மல்வத்து மாநாயக்க தேரரை நேற்று சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் விக்டோரியா நூலண்ட், மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறும் அவர் கூறியுள்ளார்.

அதாவது, யுத்தத்தினால் செய்ய முடியாததை, இதனூடாக செய்யப் பார்க்கின்றனர் என விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த பிவித்துரு ஹெல உறுமய கட்சித் தலைவர் உதய கம்மன்பில, அரசாங்கம் பொருளாதார ரீதியில் வீழ்ந்துள்ள சந்தர்ப்பத்தில், துப்பாக்கியால் செய்ய முடியாததை, டொலர் மூலம் செய்யும் எதிர்பார்ப்பிலே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்றதாக கூறியுள்ளார்.

5 comments:

  1. As long as you idiots are being elected by predominently Sinhalese, the country will not develop and no peace. Get lost.

    ReplyDelete
  2. ஆம் தமிழ் தீவிரவாதிகளினதும் ஆசியாவின் கேவலம் இந்தியாவினதும் நோக்கம் இது தான். பசில் ராஜபக்ச அதை கச்சிதமாக முடித்துக்கொடுப்பான். சிங்கள இனவாதிகள் இந்திய இந்து தீவிரவாதத்தை இலங்கையில் வளரவிட்டதன் பலனை வெகு விரைவில் அனுபவிப்பார்கள்

    ReplyDelete
  3. Recism boolshit.
    Kewum kanda yodaya

    ReplyDelete
  4. so what?
    வடக்கு கிழக்கை இந்தியாவுடன் புதிய மாணிலமாக இணைப்போம்.
    வங்குரோத்து இலங்கையால் என்ன செய்ய முடியும்?

    ReplyDelete
  5. so what?
    வடக்கு கிழக்கை இந்தியாவுடன் புதிய மாணிலமாக இணைப்போம்.
    வங்குரோத்து இலங்கையால் என்ன செய்ய முடியும்?

    ReplyDelete

Powered by Blogger.