உக்ரைனில் இருந்து நாடு திரும்ப விரும்பாத இலங்கையர்கள்
உக்ரைனில் உள்ள 20 இலங்கையர்கள் நாட்டின் எல்லையை கடந்து போலந்து மற்றும் ஹங்கேரிக்கு சென்றடைந்துள்ளனர்.
உக்ரைனில் வசிக்கும் மேலும் 14 இலங்கையர்கள் போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளுக்கு எல்லையைக் கடந்து சென்றுள்ளதாக, உக்ரைன், துருக்கி மற்றும் ஜோர்ஜியாவுக்கான இலங்கைத் தூதுவர் எம்.ஆர்.ஹசன் தெரிவித்துள்ளார்.
எனினும் உக்ரைனின் எல்லையை கடந்தவர்கள் இலங்கைக்கு வருவதற்கு எதிர்பார்க்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையர்கள் சிலர் உக்ரைனியர்களை திருமணம் செய்து அந்நாட்டில் நிரந்தர வதிவிடம் பெற்றுள்ளமையே இதற்கு காரணமாகும் என அவர் கூறியுள்ளார்.
அதுவல்ல காரணம், பஞ்சம் பிடித்த இலங்கைக்கு வந்து என்ன செய்வது என்ற கவலை அவர்களுக்கு. மருந்து மாத்திரைகள் இல்லை வைத்தியசாலைகள் ஆர்ப்பாட்டத்தில் கேஸ் இல்லை டீசல் இல்லை பெட்ரோல் இல்லை இன்னும் இன்னும் எவ்வளவோ தேவைகள் அங்கு இல்லை அப்போ எதற்கு இலங்கைக்கு வர வேண்டும்?
ReplyDelete